தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கொரோனா கிருமி குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் விதமாக,
ஊரின் நுழைவு வாயிலில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை, தண்ணீர்க் குழாய் அமைத்து, கைகளைக் கழுவுவதற்காக சோப்பும் வைத்துள்ள ஊராட்சித் தலைவர் ரகமத்துல்லாவை (50 வயது) பலரும் பாராட்டியுள்ளனர்.
பதாகை அருகில் தண்ணீர் குழாய்களை அமைத்து, கை கழுவுவதற்காக சோப்பு, கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை வைத்துள்ளார் அவர். படம்: ஊடகம்

