புதுக்கோட்டை ஜல்லிக்கட்டு போட்டியைக் காண 10 ஆயிரம் பேர் கூடியதால் சர்ச்சை

1 mins read
75cc89c5-72de-428c-9d83-f8bcaae1b52f
பொங்கல் பண்டிகையையொட்டி நடைபெற உள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளை எந்தவித பிரச்சினைகளும் இன்றி நடத்த ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. படம்: ஊடகம் -

புதுக்­கோட்டை: கொரோனா கிருமித் தொற்று கார­ண­மாக ஒரே இடத்­தில் நூற்­றுக்­க­ணக்­கா­னோர் கூடு­வ­தற்கு தமி­ழக அரசு அறி­வு­றுத்தி உள்­ளது. இந்­நி­லை­யில் புதுக்­கோட்­டை­யில் நேற்று நடை­பெற்ற ஜல்­லிக்­கட்டு போட்­டி­யைக் காண பத்­தா­யி­ரம் பேர் கூடி­யது சர்ச்­சைக்கு வித்­திட்­டுள்­ளது.

நேற்று காலை விரா­லி­மலை அரு­கே­யுள்ள ராஜ­கிரி மற்­றும் பொன்­ன­ம­ரா­வதி அருகே உள்ள பொன்­னம்­பட்டி ஆகிய ஊர்­களில் ஜல்­லிக்­கட்டு போட்­டி­கள் நடை­பெற்­றன.

ராஜ­கி­ரி­யில் ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட காளை­கள் கள­மி­றக்­கப்­பட்­டன. அதே போல் பொன்­னம்­பட்­டி­யி­லும் நூற்­றுக்­க­ணக்­கான காளை­கள் பங்­கேற்­றன. இரண்டு போட்­டி­க­ளை­யும் கண்டு ரசிக்க பத்­தா­யி­ரம் பேர் திரண்­டி­ருந்­த­னர்.

ராஜ­கி­ரி­யில் 300 மாடு­பிடி வீரர்­களும், பொன்­னம்­பட்­டி­யில் 350 வீரர்­களும் காளை­களை அடக்க கள­மி­றங்­கி­னர்.

இரு போட்­டி­க­ளுமே சிறப்­பாக நடை­பெற்­ற­தாக தக­வல் வெளி­யான நிலை­யில், தமி­ழக அர­சின் அறி­வு­றுத்­த­லை­யும் மீறி ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் ஒரே இடத்­தில் திர­ளும் வகை­யில் நிகழ்ச்சி நடத்தி இருப்­ப­தற்கு கண்­ட­னம் கிளம்­பி­யுள்­ளது.

மேலும் இந்த ஜல்­லிக்­கட்­டுப் போட்­டி­கள் தகுந்த முன்­னேற்­பா­டு­க­ளு­டன் நடத்­தப்­பட்­ட­தாக மாவட்ட நிர்­வா­கம் சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த ஆண்டு ஜல்­லிக்­கட்டு போட்­டி­யைக் காண வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­கள் யாருக்­கும் அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.

இதற்­கி­டையே, புதுக்­கோட்­டை­யில் மேலும் சில பகு­தி­களில் ஜல்­லிக்­கட்டு போட்­டி­க­ளுக்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

இவற்­றை­யா­வது ஒத்­தி­வைக்க வேண்­டும் என்ற கோரிக்கை எழுந்­துள்­ளது.

இது தொடர்­பாக அம்­மா­வட்ட ஆட்­சி­யர் உமா­ம­கேஸ்­வரி அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை நடத்தி வரு­கி­றார்.