ஆலந்தூர்: உலகநாடுகளை கொரோனா கிருமி அச்சம் ஆட்டிப் படைத்து வரும் வேளையில், சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் அனைத்துலக விமானங்கள், உள்நாட்டு விமானங்கள் என மொத்தம் 38 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
உலக நாடுகளில் இந்த கொரோனா கிருமியின் தாக்கத்துக்கு நேற்று மாலை வரை 8,160 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் போதுமான அளவில் பயணிகள் இல்லாமல் விமானங்களின் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையம் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகிறது.
போதிய பயணிகள் இல்லாததால் நேற்று ஒரேநாளில் 38 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் இருந்து 3 விமா னங்கள், குவைத்தில் இருந்து 3, தாய்லாந்து, மலேசியாவில் இருந்து தலா 2, தோகா, சிங்கப்பூர், ரியாத், துபாய், மஸ்கட் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒரு விமானம் என 15 விமானங்களும் அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 15 விமானங்கள் என ஆக மொத்தம் 30 அனைத்துலக விமானச் சேவைகள் ரத்தாகின.
அத்துடன் போதிய பயணிகள் இல்லாமல் சென்னையில் இருந்து பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி, மும்பை ஆகிய இடங்களுக்குச் செல்லும் 4 உள்நாட்டு விமானங்களும் இந்த நகரங்களிலிருந்து சென்னைக்கு வரும் 4 உள்நாட்டு விமானங்கள் என 8 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கொரோனா கிருமி பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக பல நாடுகளிலும் சுற்றுலா விசா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 14 வரை வெளிநாட்டுப் பயணிகளுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைத் துள்ளனர்.
விமானப் பயணங்கள் மூலமாக கொரோனா கிருமி பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நவீன சோதனைக் கருவிகளைக் கொண்டு பயணி களைச் சோதித்து வருகின்றனர்.
பன்னாட்டு முனையத்தில் பணி யாற்றும் அதிகாரிகள் முதல் ஊழி யர்கள் வரை முகக்கவசங்களை அணிந்தே பணியாற்றுகின்றனர்.
விமானங்களில் கொரோனா கிருமி பரவக்கூடும் என்ற பீதியால் விமானங்களில் பயணம் செய்பவர் களின் எண்ணிக்கை குறைந்து இருப்பதாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

