தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தஞ்சை கோவில், ரங்கநாதர், கபாலீஸ்வரர் கோவில்கள் மூடப்பட்டன

2 mins read
242c33a4-258d-40fa-b56e-23b7ed037d4e
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் உடல் வெட்ப பரிசோதனை செய்யப்படுகிறது. படம்: ஏஎஃப்பி -

சென்னை: கொரோனா கிருமி பரவுவதன் எதிரொலியாக கோவில்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையும் குறைந்து போனதால் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

இந்தக் கிருமியின் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சுற்றுலாத் தலமாக உள்ள வரலாற்று நினைவுச் சின்னங் களையும் மூடவேண்டும் என இந்திய தொல்லியல் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையொட்டி தஞ்சாவூர் பெரிய கோயில் நேற்று முதல் மூடப்பட்டது.

மார்ச் 31ஆம் தேதி வரை கோயில் மூடப்படுவதாகவும் அறி விப்புப் பதாகை ஒன்று தஞ்சை பெரிய கோவில் வாயில் கதவில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா கிருமி காரணமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மேற்கு கோபுர வாசல் மூடப்பட்டு, கிழக்கு ராஜகோபுர வாசல் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். கோவில் பணியாளர்கள் அனை வரும் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

கோவில் குருக்கள், ஓதுவார், கோவில் பணியாளர்கள், பக்தர்கள் உள்பட கோவிலுக்கு வரும் அனை வரது கைகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, காய்ச்சல் உள்ளதா என பரிசோதிக்கப்பட்ட பின்னரே கோவிலுக்குள் அனுமதிக்கப்படு கின்றனர்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் மாநகராட்சி சார்பில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதை கள், உண்டியல்கள் போன்றவற்றில் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

அறநிலையத்துறை கட்டுப்பாட் டில் உள்ள அனைத்துக் கோவில் களுக்கு வரும் பக்தர்களையும் தீவிர பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கவேண்டும் என்று உத்தர விடப்பட்டு உள்ளது.

தியாகராயநகரில் உள்ள திருமலை-திருப்பதி ஸ்ரீவெங்கடேஸ் வரா கோவிலில் பக்தர்களுக்கு கைகளை சுத்தம் செய்யும் கிருமி நாசினி தெளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

நாமக்கல் மலைக்கோட்டையை யொட்டி நரசிம்மசுவாமி, ரங்கநாதர் கோயில்கள் அமைந்துள்ளன. பிரசித்தி பெற்ற இந்த கோயில் களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் உள்ளூர், வெளியூர்களில் இருந்து வந்து செல்கிறார்கள்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் இருப்ப தால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் கோயில்களையும் வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று மாலை நரசிம்மர், ரங்கநாதர் கோயில்கள் பூட்டப்பட்டன. இதேபோல், மலைக்கோட்டைக்கு செல்லவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.