இனிமேல் அவர்கள் 'தூய்மைப் பணியாளர்கள்'

இனிமேல் அவர்கள் 'தூய்மைப் பணியாளர்கள்'

1 mins read
aa1ad31e-f9e8-435a-a801-b0961acebc2e
-

சென்னை: துப்­பு­ர­வுத் தொழி­லா­ளர்­கள் இனி தூய்­மைப் பணி­யா­ளர்­கள் என்று அழைக்­கப்­ப­டு­வர் என தமி­ழக முதல்­வர் அறி­வித்­துள்­ளார்.

தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில் 110 விதி­யின் கீழ் சில அறி­விப்­பு­களை தமி­ழக முதல்­வர் நேற்று வெளி­யிட்­டார். அதில் தமி­ழ­கத்­தில் இனி துப்­பு­ர­வுத் தொழி­லா­ளர்­கள் தூய்­மைப் பணி­யா­ளர்­கள் என்று அழைக்­கப்­ப­டு­வார்­கள் என்ற அறி­விப்பு இடம்­பெற்­றுள்­ளது.

மாநி­லத்­தில் 15 மாந­க­ராட்­சி­கள், 121 நக­ராட்­சி­கள், 528 பேரூ­ராட்­சி­கள் மற்­றும் 12,525 கிராம ஊராட்சி­களில் மொத்­தம் 64, 583 துப்­பு­ர­வுப் பணி­யா­ளர்­கள் தூய்மைப் பணியை செய்து வரு­கி­றார்­கள்.

இவர்­க­ளைச் சிறப்­பிக்­கும் வகை­யில் பெயர் மாற்­றம் இடம்­பெ­று­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.