சென்னை: தமிழகத்தில் 2,984 பயணிகள் தனிமைப்படுத்தப் பட்டு, தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா கிருமித் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், முகக் கவசங்கள், கிருமி நாசினிஆகியவற்றை அத்தியாவசியப் பொருட்களாக அறிவித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித் தது. இந்தப் பொருட்கள் போதுமான அளவில் கிடைப்பதை உறுதி செய்யவும், அவை பதுக்கி வைக்கப்படுவதையும், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்திய மத்திய அரசு அறிவு றுத்தல்களை அனுப்பியது.
தமிழகத்தில் சோதிக்கப்பட்ட 222 பேரில் 166 பேருக்குக் கிருமித் தொற்று இல்லை எனவும், 2 பேருக்கு அறிகுறி இருப்பதாகவும், 54 பேரின் மாதிரிகள் சோதனையில் உள்ள தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சுமார் 1.93 மில்லி யன் முகக் கவசங்கள் இருப்பில் உள்ளதாகவும், பள்ளி களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

