தனித்தீவான கொடைக்கானல்: வெளிநாட்டவர்கள் தவிப்பு

தனித்தீவான கொடைக்கானல்: வெளிநாட்டவர்கள் தவிப்பு

2 mins read
b085a7fc-d504-4074-9e36-0e3b32ad8570
-

திண்­டுக்கல்: கொரோனா கிரு­மித் தொற்று பர­வல் கார­ண­மாக கொடைக்­கா­ன­லுக்கு வரும் சுற்­று­லாப் பய­ணி­கள் தடுக்­கப்­ப­டு­கின்­ற­னர். மேலும் அங்­கி­ருந்­தும் யாரும் வெளி­யூர் செல்ல வேண்டாம் என வலியுறுத்தப்படுவதால் கொடைக்­கா­னல் தனித்­தீ­வைப் போல் மாறி­விட்­ட­தாக அங்­குள்ள பொது மக்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்­கி­டையே, கொடைக்­கா­ன­லில் தங்­கி­யி­ருந்த வெளி­நாட்டு சுற்­று­லாப் பய­ணி­கள் சிலர் அங்­கி­ருந்து வெளி­யேற முடி­யா­மல் தவிப்­ப­தாக தமி­ழக ஊட­கம் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித் தொற்று பர­வ­லைத் தடுக்­கும் நட­வ­டிக்­கை­யாக கொடைக்­கா­ன­லில் இருந்து அனைத்து வெளி­நாட்டு சுற்­று­லாப் பய­ணி­களும் வெளி­யேற வேண்­டும் என மாவட்ட நிர்­வா­கம் அண்­மை­யில் அறி­வித்­தது.

இதை­ய­டுத்து பெரும்­பா­லான வெளி­நாட்­ட­வர்­கள் வெளி­யே­றி­விட்­ட­னர். எனி­னும் இஸ்­‌ரேலை சேர்ந்த பத்­துக்­கும் மேற்­பட்ட சுற்­று­லாப் பய­ணி­கள் விசா உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளால் அங்­கேயே முடங்கி உள்­ள­னர். அவர்­க­ளின் நிலையை அறிந்து இம்­மாத இறுதி வரை கொடைக்­கா­ன­லில் தங்­கி­யி­ருக்க அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதற்கிடையே, கடந்த இரு தினங்களாக கொடைக்கானலுக்கு வந்த வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி அருகே தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.

அனைத்து தங்கும் விடுதிகள், உணவகங்களை மூட வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் அவை வெறிச்சோடி காணப்படுகின்றன.

கார், பேருந்துகள் மூலம் கொடைக்கானல் வந்த சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப் பட்டனர். வரும் 31ஆம் தேதி வரை கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையே கொரோனா கிருமித் தொற்று குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தலைவர் திரிபாதி எச்சரித்துள்ளார்.

வதந்தி பரப்பிய சிலர் கைதாகி இருப்பதாக அவர் கூறினார்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதாகவும் அண்மையில் வதந்தி பரவியது.