எரிவாயு கசிவால் பற்றி எரிந்த கடைவீதி

எரிவாயு கசிவால் பற்றி எரிந்த கடைவீதி

1 mins read

கிருஷ்­ண­கிரி: சிலிண்­ட­ரில் இருந்து எரி­வாயு கசிந்­த­தால் ஏற்­பட்ட விபத்­தில் நான்கு பேர் பலி­யா­கி­னர். பத்து வாக­னங்­கள் தீக்­கி­ரை­யா­கின.

பெங்­க­ளூரு அருகே உள்ள சமை­யல் எரி­வாயு சிலிண்­டர்­களை வைக்­கும் கிடங்கு செயல்­பட்டு வரு­கிறது. நேற்று முன்­தி­னம் அக்­கி­டங்­களில் இருந்து 450 கிலோ எடை கொண்ட மிகப் பெரிய சிலிண்­டர் ஒன்று ஓசூ­ரில் உள்ள தனி­யார் தொழிற்­சா­லைக்கு கொண்டு வரப்­பட்­டது.

சிலிண்­ட­ரு­டன் வந்த வாக­னம் காலை சுமார் 11.30 மணி­ய­ள­வில் ஓசூர் அருகே அல­ச­நத்­தம் பகு­தியை நெருங்­கிய போது, மேடு, பள்­ள­மான சாலை­யைக் கடக்க வேண்­டி­யி­ருந்­தது. இத­னால் வாக­னம் பல­முறை குலுங்­கி­ய­தில், வாக­னத்­தில் இருந்த சிலிண்­ட­ரில் இருந்து எரி­வாயு கசிந்­துள்­ளது.

இத­னால் பயந்து போன ஓட்­டு­நர், வாக­னத்தை நிறுத்­தி­விட்டு ஓட்­டம்­பி­டித்­தார். வேக­மாக கசிந்த எரி­வாயு, அப்­ப­கு­தி­யில் இருந்த கடை­க­ளுக்­குப் பர­வி­யது. இத­னால் அக்­க­டை­களில் தீப்­பி­டித்­தது.

கோழிக்­கடை, சாப்­பாட்­டுக்­கடை என கடை­வீதி முழு­வ­தும் பொருட்­கள் திடீ­ரென தீப்­பி­டித்து எரிந்­த­தால் அனை­வ­ரும் ஓட்­டம்­பி­டித்­த­னர்.

இதில் நான்கு பேர் படு­கா­யம் அடைந்­த­னர். கடை­வீ­தி­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த ஆட்டோ ஒன்­றும், 9 இரு­சக்­கர வாக­னங்­களும் தீக்­கி­ரை­யா­கின.

ஒரே நேரத்­தில் கடை­வீ­தி­யின் இரு­பு­ற­மும் தீப்­பற்றி எரிந்த சம்­ப­வத்­தால் அப்­ப­கு­தி­யில் பர­ப­ரப்பு நில­வி­யது. இது குறித்து போலிசார் விசாரித்து வருகின்றனர்.