சிறப்பு வகுப்புகள்: ஆசிரியர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை

2 mins read

சென்னை: கொரோனா கிரு­மித் தொற்று பீதி கார­ண­மாக தமி­ழ­கம் முழு­வ­தும் பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில் ஆசி­ரி­யர்­கள் தங்­கள் வீடு­க­ளி­லும், தனி­யார் மையங்­க­ளி­லும் மாண­வர்­க­ளுக்கு டியூ­ஷன் வகுப்­பு­கள் நடத்­தி­னால் ஒழுங்கு நட­வ­டிக்கை பாயும் என தமி­ழக அரசு எச்­ச­ரித்­துள்­ளது.

நாடு முழு­வ­தும் பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை விடு­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யில் அரசு உத்­த­ரவை மீறி சில தனி­யார் பள்­ளி­கள் இயங்­கு­வ­தாக தக­வல் வெளி­யா­னதை அடுத்து, கல்­வித்­துறை அதி­கா­ரி­கள் இது­கு­றித்து விசா­ரித்து வரு­கின்­ற­னர்.

மேலும் ஆசி­ரி­யர்­கள் சிலர் மாண­வர்­க­ளுக்கு தங்­கள் வீடு­களில் சிறப்பு வகுப்­பு­கள் நடத்­து­வ­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

தனி­யார் மையங்­க­ளுக்­குச் சென்­றும் ஆசி­ரி­யர்­கள் வகுப்­பு­கள் நடத்­து­வ­தாக தொடர் புகார்­கள் எழுந்­ததை அடுத்து, கல்­வித்­துறை அனைத்­துப் பள்­ளி­க­ளின் தலைமை ஆசி­ரி­யர்­க­ளுக்­கும் சுற்­ற­றிக்கை அனுப்பி உள்­ளது.

அதில், வீடு­கள் மற்­றும் தனி­யார் பயிற்சி மையங்­களில் ஆசி­ரி­யர்­கள் சிலர் சிறப்பு வகுப்­பு­களை எடுப்­பது அரசு உத்­த­ர­வுக்கு எதி­ரா­னது எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

மாண­வர்­கள் ஒன்­று­கூ­டு­வ­தைத் தவிர்க்­கவே பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விடப்­பட்­டுள்­ள­தா­கச் சுட்­டிக்­காட்­டி­யுள்ள கல்­வித்­துறை, அரசு ஆணைக்­குப் புறம்­பா­கச் செயல்­படும் ஆசி­ரி­யர்­கள் குறித்த அனைத்து விவ­ரங்­க­ளை­யும் திரட்டி பள்­ளிக் கல்­வித்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் எனத் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா பீதி கார­ண­மாக பள்­ளித் தேர்­வு­கள் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. இந்த வாய்ப்­பைப் பயன்­ப­டுத்தி தேர்­வுக்கு மேலும் தீவி­ர­மாக தயா­ரா­க­லாம் என்று சொல்லி தனி­யார் கல்வி மையங்­கள் சிறப்பு வகுப்­பு­க­ளுக்கு ஏற்­பாடு செய்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இதற்­காக கணி­ச­மான கட்­ட­ணம் வசூ­லிக்­கப்­ப­டு­கிறது என்­றும், அதில் குறிப்­பிட்ட தொகை ஆசி­ரி­யர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கிறது என்­றும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. இதையடுத்து அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.