நாகை: கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கையாக நாகையை அடுத்த நாகூரில் உள்ள பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்கா 463 ஆண்டுகளில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை மாலை மூடப்பட்டது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மத வழிபாடுகளும் பக்தா்களின் வருகையையும் தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.
இதையடுத்து நாகூரில் உள்ள புகழ் பெற்ற தா்காக்களுள் ஒன்றான நாகூா் பாதுஷா சாகிபு ஆண்டவா் தா்காவில் பக்தா்களின் வருகைக்கு வெள்ளிக்கிழமை முதல் தடைவிதித்து தா்கா நிா்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இம்மாாதம் 31ஆம் தேதி வரை நாகூா் தா்காவில் பக்தா்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படமாட்டாா்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை அன்று தா்காவிலிருந்து பக்தா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, தா்காவின் வாசல் தலைமாட்டு வாசல், கால்மாட்டு வாசல், கிழக்கு வாசல் ஆகிய வாசல் கதவுகள் அடைக்கப்பட்டன.

