திருநெல்வேலியைச் சேர்ந்த பணி ஓய்வுபெற்ற வட்டாட்சியர் மூர்த்தியின் மகன் எம் கௌதம் கார்த்திக்கும் காஞ்சி புரம் நெசவாளர் திருவேங் கடத்தின் மகள் தமிழ்ச் செல்விக்கும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால், தமிழகத் தில் நேற்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதைத் தொடர்ந்து கச்சபேஸ்வரர் கோவில் நடை சாத்தப்பட்டது. இதையடுத்து கோயிலில் நடக்கவிருந்த திருமணம் காஞ்சிபுரம், நாராயணபாளையம் தெருவில் உள்ள மணமகள் இல்லத்தில் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் கை கழுவும் திரவத்தின் மூலம் சுத்தப்படுத்திக்கொண்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
மணமகள் முகக்கவசம் அணிந்திருந்த நிலையிலேயே மணமகன் மாங்கல்யம் சூட்டினார். மிகக்குறைவான உறவினர்களை மட்டுமே வரவழைத்து திருமணத்தை நடத்தினர். படம்: ஊடகம்

