ஊரடங்கு உத்தரவால் 24 திருமணம் ஒத்திவைப்பு

ஊரடங்கு உத்தரவால் 24 திருமணம் ஒத்திவைப்பு

2 mins read
d243752c-bf47-4de5-896b-036a1746c38f
தடை உத்தரவால் கோயிலில் நடக்கவேண்டிய மகள் திருமணம் தடைபடுகிறதே என வருந்திய தனது கட்சித்தொண்டர் வேணுகோபால் என்பவருக்கு ஆறுதல்கூறிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், திருமணத்தை நிறுத்த வேண்டாம் எனது வீட்டில் நடத்துங்கள் என தனது சைதாப்பேட்டை வீட்டைக் கொடுத்து உதவியிருக்கிறார். மணமக்கள் விமல்குமார், கமலி ஆகியோரின் இந்தத் திருமணத்தில் மொத்தம் 17 குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மணமக்கள் உட்பட திருமணத்தில் கலந்துகொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். படம்: ஊடகம் -

மதுரை: கொரோனா கிருமி பரவலைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், பெரும் கூட்டம் கூடுவதைத் தவிர்ப்பதற்காக மதுரையில் நேற்று 24 திருமண மண்டபங்களில் நடைபெறவிருந்த திருமணங்கள் வேறொரு தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் நலன் கருதி இந்த திருமணங்கள் தள்ளி வைக் கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மணவீட்டாரும் இணைந்து இந்த முடிவை மேற்கொண்டுள்ளனர்.

நாடு முழுவதும் மக்கள் சுய ஊர டங்கை கடைப்பிடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி இருந் தார். அதன்படி நேற்று காலை 7 முதல் இரவு 9 மணி வரை மக்கள் வீட்டிலேயே இருந்தனர். பேருந்துகள், ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்றைய சுப முகூர்த்த நாளில் தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற இருந்தன. ஆனால் ஊரடங்கைத் தொடர்ந்து சில திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன. இருப்பினும் நேற்றைய தினம் திருமணத்திற்கு உதந்த தினம் என்று கூறி சிலர் திருமணத்தை நிறுத்தாமல் நடத்தி முடித்தனர்.

கடலூரில் கோவில்கள் மூடப்பட்டிருந்ததால் கோவிலில் செய்ய வேண்டிய திருமணத்தை சாலையில் வைத்து சில குடும்பத்தினர் நடத்தி னர்.

திருநெல்வேலியில் உள்ள ஒரு கோவிலில் ஏழு திருமணங்கள் நடந்தன. ஒரு திருமணம் நடைபெற்ற 15 நிமிடங்களில் அடுத்தடுத்த திரு மணங்கள் நடைபெற்றன.

இதேபோல் கோவில்களில் நடைபெற இருந்த ஒருசில திருமணங்களும் வேறு தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.

தஞ்சாவூரில் சிலர் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தைத் தள்ளிப் போடாமல் நடத்தினர். ஆனால் கூட்டம் குறைவாகவே இருந்தது.

திருமணம் முடிந்தவுடன் யாரும் சாப்பிடாமல் உடனடியாக மண்ட பத்தைவிட்டு வெளியேறி வீட்டுக்குச் சென்றனர்.