மஞ்சள், வேப்பிலை சாறில் ஊற வைத்த முகக்கவசம் விநியோகம்

மஞ்சள், வேப்பிலை சாறில் ஊற வைத்த முகக்கவசம் விநியோகம்

1 mins read
d35c92d8-c075-4970-95c5-e1063863e151
கோப்புப்படம்: ஊடகம் -

ராணிப்பேட்டை: முதியவர் ஒருவர் கொரோனா கிருமி பரவுவதைத் தடுக்கும் வகையில் முகக்கவசங்களை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினார்.

இயற்கை கிருமி நாசினிகளாகக் கருதப்படும் மஞ்சள், வேப்பிலைச் சாறில் ஊறவைத்த பருத்தித் துணியிலான முகக்கவசங்களை பெற்றுக்கொண்ட மக்கள், சமூக ஆர்வலரான ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மோகனசுந்தரத்தின் பொதுநலச் சேவை மனப்பான்மையைப் பாராட்டினர். ராணிப்பேட்டையில் உள்ள முத்துக்கடை பேருந்து நிலையத்தில் மீண்டும் பயன்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்ட இந்த முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.