அதிக விலை: 40 மருந்துக் கடைகள் மூடப்பட்டன

அதிக விலை: 40 மருந்துக் கடைகள் மூடப்பட்டன

1 mins read
3798b594-c20c-473e-bf25-a1b802746f02
தமிழகம் முழுவதும் முகக் கவசம், கை கழுவும் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. கோப்புப்படம்: ஊடகம் -

திருப்பூர்: தமிழகம் முழுவதும் முகக் கவசம், கை கழுவும் மருந்து போன்றவற்றை அதிக விலைக்கு விற்ற 40 மருந்து கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.

முகக் கவசம், கை கழுவும் திரவம் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மருந்துக் கடைகளில் இவை கிடைப்பதில்லை.

இவற்றை அத்தியாவசிய பொருட்களாக மத்திய அரசு அறிவித்துள்ளதால், கூடுதல் விலைக்கு எவரேனும் பதுக்கி விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மருந்தக ஆய்வாளர்கள் கூறினர்.

கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் கோவை மண்டல மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குநர் குருபாரதி தலைமையில் நேற்று முன்தினம் ஆய்வு நடத்தப்பட்டு ஏராளமான கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.