தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முகக் கவசம் தயாரிப்பு பணியில் மகளிர் தீவிரம்

1 mins read
82e5496a-934e-446b-9679-146789a088c5
-

சென்னை: கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு முகக்கவசம் மிகவும் அவசியமாக உள்ளதால் இதன் தேவையும் பெருமளவு அதிகரித்து உள்ளது. இதன் முக்கியத்துவத்தைப் பயன்படுத்தி மருந்தகங்களில் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்கின்றனர்.

ஆனால் ஏழை மக்களுக்கும் இந்த முகக் கவசங்கள் எளிதாகக் கிடைக்கும் வகையில் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு முகக் கவசம் தயாரிப்பதற்கு பயிற்சி அளித்து, அதை தயாரிக்கும் பணி கள் தீவிரமாக நடந்து வருகின்றன.

அதன்படி தஞ்சாவூர் மாவட் டத்தில் 23 குழுவினரும் திருவாரூர் மாவட்டத்தில் 15 குழுவினரும் நாகையில் 10 குழுவினரும் நிரந்தர, ஒருமுறை பயன்படுத்தும் முகக்கவ சங்களைத் தயாரித்து வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 10,000 முதல் 15,000 வரை முகக்கவசங்களைத் தயாரிக்கத் துவங்கி உள்ளனர்.

இங்கு தயாரிக்கப்படும் முகக் கவசங்கள் கொரோனா கிருமி தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும். அத்துடன் பொதுமக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஊரக வளர்ச்சி அலு வலர்கள் தெரிவித்துள்ளனர்.