பன்முக திறமையாளர் விசு காலமானார்

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90களில் முன்னணி இயக்குனரும், நடிகருமாக இருந்தவர் விசு என்று அழைக்கப்படும் மீனாட்சிசுந்தரம் ராமசாமி விஸ்வநாதன் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (மார்ச் 22) உயிரிழந்தார்.

அவருக்கு வயது 74.

சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். சில தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மரணம் அடைந்தார்.

அன்னாரின் உடல் துரைப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இயக்குனர், நடிகர், வசனகர்த்தா, கதாசிரியர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பன்முக திறமை கொண்டவர் விசு. அவரது நிகழ்ச்சிகளும் படங்களும் தனி முத்திரை பதித்தன.

தொடக்கத்தில் இயக்குனர் கே.பாலசந்தரிடம் உதவியாளராக பணியாற்றினார். 1982-ல் கண்மணி பூங்கா என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

மணல் கயிறு, டவுரி கல்யாணம், அவள் சுமங்கலிதான், கெட்டி மேளம், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம், காவலன் என் கோவலன், பெண்மணி அவள் கண்மணி, திருமதி ஒரு வெகுமதி, வா மகளே வா, மீண்டும் சாவித்திரி உள்பட பல படங்களை இயக்கி உள்ளார்.

இதில் ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார். 1986-ல் வெளியான இந்த படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வெள்ளி விழா கண்டதுடன், சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது.

இதுபோல் விசு நடித்து இயக்கி 1992-ல் வெளியான ‘நீங்க நல்லா இருக்கணும்’ படத்துக்கும் தேசிய விருது கிடைத்தது.

சிவகுமார் நடித்த 'அவன் அவள் அது', ரஜினிகாந்தின் 'தில்லுமுல்லு', 'நெற்றிக்கண்', 'புதுக்கவிதை', 'நல்லவனுக்கு நல்லவன்', 'மிஸ்டர் பாரத்' உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை எழுதி உள்ளார்.

'தில்லுமுல்லு', 'குடும்பம் ஒரு கதம்பம்', 'புதிய சகாப்தம்', 'மெல்ல திறந்தது கதவு', 'மன்னன்', 'வனஜா கிரிஜா', 'வா மகளே வா', 'அருணாசலம்', 'சின்ன மாப்பிள்ளை' உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

மறைந்த விசுவுக்கு உமா என்ற மனைவியும் லாவண்யா, சங்கீதா, கல்பனா என்ற 3 மகள்களும் உள்ளனர். 2 மகள்கள் அமெரிக்காவில் உள்ளனர். இன்று மாலை (திங்கட்கிழமை) இறுதி சடங்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அமரர் விசுவின் மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

#நடிகர் விசு #தமிழ் முரசு

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!