சென்னை: கொரோனா கிருமி தொற்றுவதைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழகத்தில் ஏறக்குறைய 9,424 பயணிகள் 28 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று முன்தினம் மட்டும் 400 பேர் கூடுதலாக தனி மைப்படுத்தப்பட்டனர். ஸ்பெயினில் இருந்து கோவை திரும்பிய 32 வயது பெண்ணுக்கும் கலிபோர்னியாவில் இருந்து வந்த 64 வயது மூதாட்டிக்கும் துபாயில் இருந்து தமிழகம் திரும்பிய 43 வயது ஆணுக்கும் நேற்று முன் தினம் கிருமி தொற்றியிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை ஒன்பது பேருக்கு கிருமி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் குணமாகிவிட்டார்.
மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுவரை வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்த 2,05,396 பேரிடம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
அவர்களில் 9,424 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தெரி வித்தது.
தற்போது கொரோனா அறிகுறிகளுடன் 54 பேர் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். 443 பேரின் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதில் 9 பேருக்கு கொரோனா கிருமி இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிப்பு இல்லாதவர்கள் 352 பேர் ஆவர். 84 பேரின் ரத்த மாதிரிகள் இன்னும் ஆய்வில் உள்ளன.
சுயமாக தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய சில பயணிகள் அரசின் உத்தரவை மீறுவது சமூகத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் என்றும் அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை பாயும் என்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "சுகாதாரத் துறையின் கண்காணிப்பில் வீட்டில் உள்ளவர்கள் சுய தனிமைப்படுத் தலுக்கான அரசின் கடுமையான உத்தரவை மீறினால் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வெளிநாடு சென்று வந்த பயணி களின் பட்டியல் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினரிடம் கண் காணிப்பதற்காக ஒப்படைக்கப்பட்டு உள்ளது," என்று தெரிவித்து உள்ளார்.

