ஈரானில் மரண எண்ணிக்கை 1,800

டெஹ்ரான்: ஈரானில் கொரோனா கிருமித்தொற்றால் மேலும் 127 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதார அமைச்சின் பேச்சாளார் ஒருவர் நேற்று தெரிவித்தார். அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,812ஐ எட்டிவிட்டது.
மத்திய கிழக்குப் பகுதியில் ஆக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,411 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23,000ஐ எட்டியுள்ளது.