தனி மாவட்டம் ஆனது மயிலாடுதுறை

தனி மாவட்டம் ஆனது மயிலாடுதுறை

1 mins read
bd3d650d-9214-4594-a86e-e68142c90267
-

சென்னை: தமிழகத்தின் 38வது மாவட்டமாகிறது மயிலாடுதுறை. நேற்று சட்டப்பேரவையில் இதற்கான அறிவிப்பை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

இதுவரை நாகை மாவட்டத்தின் முக்கிய நகராட்சியாக இருந்து வந்தது மயிலாடுதுறை. திருவாரூர், கும்பகோணம், சிதம்பரம், மன்னார்குடி ஆகிய இடங்களின் கூட்டுச் சந்திப்பாகவும் மயிலாடுதுறை திகழ்கிறது.

இந்நிலையில் பொதுமக்கள் வசதிக்காகவும், நிர்வாகக் காரணங்களுக்காகவும் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்டகாலமாக அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசும் இதைப் பரிசீலித்து வந்தது.

இந்நிலையில் மக்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது தமிழக அரசு.

இதையடுத்து மயிலாடு துறை மிக விரைவில் நாகையில் இருந்து பிரிக்கப்பட்டு புது மாவட்டமாக செயல்படும்.

மயிலாடுதுறை தனி மாவட்டமாக பிரிக்கப்படுவதையடுத்து தமிழகத்தின் மாவட்டங் களின் எண்ணிக்கை 38 ஆக உயர்கிறது. இதனால் மயிலாடுதுறை பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தனி மாவட்டத்துக்கான பணிகள் விரைவில் துவங்கும் எனத் தெரிகிறது.