இரட்டிப்பான காய்கறிகளின் விலை: பொதுமக்கள் அதிருப்தி

1 mins read
ce043f37-b7b0-483c-bef8-8659a8bdf5d6
கோயம்பேடு சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை வாங்கிய சில்லறை வியாபாரிகள் அதை விட அதிகமாக விலை வைத்து விற்றதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர். படம்: ஊடகம் -

சென்னை: கோயம்பேடு சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. இதையடுத்து அவற்றை வாங்கிய சில்லறை வியாபாரிகள் அதை விட அதிகமாக விலை வைத்து விற்றதால் பொது மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

கொரோனா கிருமி தொற்றுப் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அதிகளவில் வாங்கினர்.

தேவை அதி­க­ரித்­ததை அடுத்து கோயம்­பேடு காய்­க­றிச் சந்­தை­யில் கத்­தி­ரிக்­காய், உருளை உள்­ளிட்ட காய்­க­றி­க­ளின் விலை அதி­க­ரித்­தது. கடந்த இரு தினங்­க­ளுக்கு முன்பு வரை கிலோ 30 ரூபாய்க்கு விற்ற காய்­க­றி­க­ளின் விலை, 60 முதல் 70 ரூபாய் என நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இதே போல் பழங்­க­ளின் விலை­யும் கடு­மை­யாக அதி­க­ரித்­தது. இத­னால் பொது மக்­கள் திகைத்­துப் போயி­னர்.

எனி­னும் 144 தடை உத்­த­ரவை மன­திற்­கொண்டு கையில் இருக்­கும் பணத்­துக்கு ஏற்ப காய்­க­றி­களை குறை­வாக வாங்­கிச் சென்­ற­னர்.

காய்கறிகளின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.