கோயம்பேடு சீமாத்தம்மன் நகர் இரண்டாவது செக்டார் பகுதியைச் சேர்ந்தவர் தவீப் நூர் முகமது, 27, தமது தந்தை சாதிக், 62. இருவரும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருந்து சென்னை திரும்பினர்.
கோயம்பேட்டில் தங்கியிருந்த இருவரும் வெளிநாடு சென்று திரும்பிய தகவலைத் தெரிவிக்கவில்லை. இதனால் இருவர் மீதும் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா நகர் இரண்டாவது பிரதான சாலையில் வசித்து வந்தவர் லட்சுமணன் அருண்.
சீனாவில் இருந்து திரும்பிய இவர் நோய் பரவாமல் தனித்து இருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது.
இதை மீறி வெளியே சென்றதால் அவர் மீது நோய் பரவல் தடுப்புச் சட்டம் மற்றும் பேரிடர் சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

