கொவிட்-19 பாதிப்பு: தமிழகத்தில் எண்ணிக்கை 23 ஆனது

சென்னை: தமி­ழ­கத்­தில் நேற்று மேலும் ஐவ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்­டதை அடுத்து பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 23 ஆக அதி­க­ரித்­துள்­ளது. இந்­தோ­னீசி­யா­வைச் சேர்ந்த நான்கு பேருக்­கும் சென்­னை­யைச் சேர்ந்த சுற்­றுலா வழி­காட்டி ஒரு­வ­ருக்­கும் நேற்று கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது.

முன்­ன­தாக, செவ்­வாய்க்­கி­ழமை மாலை நில­வ­ரப்­படி பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை 18ஆக இருந்­தது. வெளி­நா­டு­களில் இருந்து கடந்த சில தினங்­களில் தமிழ்­நாட்­டுக்கு வந்­த­வர்­களில் சுமார் 2 லட்­சத்து 10 ஆயி­ரம் பேர் மருத்­துவ பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­னர்.

அவர்­களில் 15,298 பேர் தமிழ்­நாடு முழு­வ­தும் பல்­வேறு ஊர்­களில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ள­னர். அவர்­கள் அனை­வ­ரும் 28 நாட்­கள் கண்­டிப்­பாக வீட்­டுக்­குள் இருக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்டு உள்­ளது.

கொரோனா அறி­கு­றி­க­ளு­டன் அனு­ம­திக்­கப்­பட்­ட­வர்­களில் 743 பேரின் ரத்த மாதிரி இது­வரை சோதிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­களில் 608 பேருக்கு கொரோனா கிருமி தாக்­கம் இல்லை என்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 120 பேரின் ரத்த மாதிரி பரி­சோ­தனை வர­வேண்டி உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!