மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதியளித்துள்ளதாக சுகா தார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இந்த பரிசோ தனை மையம் அமையவுள்ளது. இதனால் மதுரை மற்றும் சுற்று வட்டார மக்களுக்கு பரிசோத னையை உடனுக்குடன் மேற் கொள்ள வழி பிறந்துள்ளது. இதன்மூலம் 8வது கொரோனா பரிசோதனை மையம் மதுரையில் அமைகிறது. சென்னை, தேனி, நெல்லை, திருவாரூர், கோவை, சேலம், ஈரோடு ஆகிய இடங்க ளில் பரிசோதனை மையங்கள் உள்ளன.
மதுரையில் 8வது கிருமி சோதனை மையம்
1 mins read
-

