வெள்ளகோவில்: வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களாலும் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களாலும் கொரோனா கிருமி பரவுதாக கிராம மக்கள் கருதுகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் மூலனூர், காங்கேயம், வெள்ளகோவில் பகுதிகளில் தங்கி இருக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கட்டாயம் மருத்துவப் பரிசோதனை செய்யவேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் வெள்ளகோவில் அருகே உள்ள காடையூரான் வலசின் ஊர் எல்லையில் அந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனர். அந்த அறிவிப்பு பதாகையில் கொரோனா கிருமி தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்கள் ஊரில் குடியிருப்பவர்களைத் தவிர வேறு வெளிநபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம்" என்ற வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு பதாகையால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

