மீண்டும் முடங்கியது தமிழகம்

மீண்டும் முடங்கியது தமிழகம்

2 mins read
3a413f6d-7d53-418f-871a-c957ec5be4ab
தடை உத்தரவை மீறி வாகனங்களில் சென்றோரை சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் பிளாசா அருகே வழிமறித்த போக்கு வரத்து காவல் ஆய்வாளர் ரஷீத், கையெடுத்து கும்பிட்டு திரும்பிச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். படம்: சமூக ஊடகம் -

சென்னை: கொரோனா கிரு­மி­யைக் கட்­டுப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யாக தமிழ்­நாட்­டில் 144 தடை உத்­த­ரவு அமல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தால் ஒட்­டு­மொத்த மாநி­ல­மும் நேற்று முடங்­கி­யது. ஏற்­கெ­னவே கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பிர­த­மர் மோடி அறி­வித்த மக்­க­ளின் ஊர­டங்கு கார­ண­மாக எல்லா மாநி­லங்­க­ளோடு தமி­ழ­க­மும் முடங்­கி­யது. மீண்­டும் நேற்று தமி­ழ­கத்­தில் சாலை­கள் வெறிச்­சோ­டிக் கிடந்­தன. மக்­கள் நட­மாட்­டம் பெரும்­பா­லும் குறைந்­து­விட்­டது.

செவ்­வாய்க்­கி­ழமை மாலை 6 மணி முதல் நடப்­புக்கு வந்­துள்ள 144 தடை உத்­த­ரவு ஏப்­ரல் 1ஆம் தேதி காலை வரை நீடிக்­கும். இந்த உத்­த­ர­வின்­படி பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­டு­கின்­றன. அத்­தி­யா­வ­சிய மற்­றும் அவ­சர பணி­கள் தவிர மற்ற பொதுப்­போக்­கு­வ­ரத்து, தனி­யார் போக்­கு­வ­ரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்­றவை இயங்­க­வில்லை.

மக்­கள் அனை­வ­ரும் வீட்­டுக்­குள் இருக்­க­வேண்­டும். அத்­தி­யா­வ­சிய தேவை­க­ளுக்­காக மட்­டும் வெளியே வந்­தா­லும் மற்­ற­வர்­க­ளு­டன் 1 மீட்­டர் அல்­லது 3 அடி தூரம் இடை­வெளி விட்டு வில­கலை கடைப்­பி­டிக்­க­வேண்­டும். பொது இடங்­களில் 5 பேருக்கு மேல் மக்­கள் கூடு­வது தடை செய்­யப்­ப­டு­கிறது. அனைத்து இடங்­க­ளி­லும் அம்மா உண­வ­கங்­கள், ஆவின் பால் விற்­பனை நிலை­யங்­கள் இயங்­கு­கின்­றன.

மளிகை கடை­கள், உண­வ­கங்­கள் செயல்­ப­ட­லாம். உண­வ­கங்­களில் இருந்து வீட்­டுக்கு உணவு வாங்­கிச் செல்­ல­லாம். ஆனால் அவற்­றில் அமர்ந்து சாப்­பிட தடை. டாஸ்­மாக் மது­பா­னக் கடை­கள் மூடப்­பட்­டி­ருக்­கும்.

அனைத்து அரசு அலு­வ­ல­கங்­கள், சுயாட்சி நிறு­வ­னங்­கள், பொதுத்­துறை நிறு­வ­னங்­கள் ஆகி­ய­ன­வும் மூடப்­ப­டு­வ­தோடு மாநி­லங்­க­ளுக்கு மற்­றும் மாவட்­டங்­க­ளுக்கு இடை­யே­யான போக்­கு­வ­ரத்­துச் சேவை­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

அனைத்து கல்வி நிறு­வ­னங்­களில் பணி­யாற்­றும் ஆசி­ரி­யர்­கள் மற்­றும் ஊழி­யர்­கள் வீட்­டில் இருந்­த­வாறு பணி­யாற்­ற­வேண்­டும்.

அனைத்து மத­வ­ழி­பாட்டு தலங்­க­ளி­லும் பொது­மக்­கள் தரி­ச­னத்­துக்­கும் பூஜை­க­ளுக்­கும் அனு­மதி கிடை­யாது. ஆனால் தின­சரி பூஜை­கள் வழக்­கம்­போல் நடை­பெ­றும்.

இதற்­கி­டையே, சென்­னை­யில் 144 தடை உத்­த­ரவை மதிக்­கா­மல் ஊர் சுற்­றிய பய­ணி­க­ளி­டம் காவ­லர் கையெ­டுத்து கும்­பிட்ட காணொளி தற்­போது சமூக வலைத்த­ளங்­களில் வைர­லாகி வரு­கிறது.

சென்னை அண்­ணா­சா­லை­யில் ஸ்பென்­சர்­பி­ளாசா அமைந்­தி­ருக்­கும் முக்­கிய சந்­திப்­பில் வாக­னங்­களில் சென்­ற­வர்­க­ளைத் தடுத்து நிறுத்­திய போக்­கு­வ­ரத்து காவல் ஆய்­வா­ளர் ரஷீத், கை எடுத்து கும்­பிட்டு, "தயவு செய்து தேவை­யில்­லா­மல் வீடு­களை விட்டு வெளியே வரா­தீர்­கள்," என கேட்­டுக்­கொண்­டார். அப்­போது திடீ­ரென இளைஞர் ஒரு­வர் காவல் ஆய்­வா­ள­ரின் காலில் விழுந்து, மன்­னிப்­புக் கேட்டு சென்­றது வாகன ஓட்­டி­க­ளி­டையே வியப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

தற்­போது இந்த காணொளி இணை­யத்­தில் வேக­மா­கப் பரவி வரு­கிறது. தெலுங்­கானா உள்­ளிட்ட சில மாநி­லங்­களில் வெளியே வரும் வாகன ஓட்­டி­களை காவல்­து­றை­யி­னர் தடி­யடி நடத்தி வீட்­டுக்கு அனுப்­பி­வைக்­கின்­ற­னர்.

உத்­த­ர­காண்­டில், 'நான் சமூக விரோதி' என்று எழு­தப்­பட்ட காகி­தத்­தைக் கையில் கொடுத்து காவல்­து­றை­யி­னர் புகைப்­ப­டம் எடுத்து சமூக வலைத்­த­ளங்­களில் பரப்பி வரு­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில் சென்னை காவல் ஆய்­வா­ள­ரின் நட­வ­டிக்கை பல­ரது பாராட்­டை­யும் பெற்று வரு­கிறது.