1,184 கைதிகளை விடுவித்த கிருமி

1,184 கைதிகளை விடுவித்த கிருமி

1 mins read

சென்னை: கொரோனா கிருமி தடுப்பு எதி­ரொ­லி­யாக சிறைச்­சா­லை­களில் கூட்ட நெரி­சலை தவிர்ப்­ப­தற்­கா­க­வும் கைதி­க­ளுக்கு நோய் தொற்று ஏற்­ப­டு­வதை தடுக்­கும்­பொ­ருட்­டும் சிறு­சிறு வழக்­கு­களில் அடைக்­கப்­பட்டு உள்ள விசா­ரணை கைதி­களை விடு­விக்க தமி­ழக அரசு முடிவு செய்­தது. இதைத்­தொ­டர்ந்து, நீதி­மன்­றம் மூலம் பிணை வழங்கி நேற்று முன்­தி­னம் விசா­ரணை கைதி­களில் ஆண்­கள் 226 பேரும் பெண் கைதி­கள் 36 பேரும் தேர்வு செய்­யப்­பட்டு படிப்­ப­டி­யாக விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

திருச்சி மத்­திய சிறை­யில் 2 ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்­ட கைதி­கள் சிறை­யில் இருக்­கி­றார்­கள். இவர்­களில் 125 பேர் சொந்த பிணை­யில் விடு­விக்­கப்­பட்டு உள்­ள­னர்.

எல்லா சிறைச்­சா­லை­களில் இருந்­தும் 1,184 விசா­ர­ணைக் கைதி­கள் பிணை­யில் விடு­விக்­கப்பட்­டுள்­ள­னர்.