ரூ.4,000 கோடி சிறப்பு நிதிக்கு கோரிக்கை

ரூ.4,000 கோடி சிறப்பு நிதிக்கு கோரிக்கை

1 mins read
08809364-03e5-45c8-935d-67763279472b
-

சென்னை: அனை­வ­ரும் பொறுப்­பான குடி­மக்­க­ளாக இருந்து சமு­தா­யத்­தைப் பாது­காக்க வேண்­டும் என முதல்­வர் பழ­னி­சாமி கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

நேற்று முன்­தி­னம் இரவு தொலைக்­காட்சி வழி தமி­ழக மக்­க­ளி­டம் உரை­யாற்­றிய அவர், கொரோனா கிரு­மித் தொற்றை எதிர்­கொள்ள தமி­ழ­கத்­துக்கு சிறப்பு நிவா­ரண நிதி­யாக ரூபாய் 4 ஆயி­ரம் கோடி ஒதுக்­கீடு செய்­ய­வேண்­டும் என மத்­திய அர­சி­டம் கோரிக்கை விடுத்­தி­ருப்­ப­தா­க குறிப்­பிட்­டார்.

கொரோனா கிரு­மித் தொற்­றுக்கு எதி­ராக பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்­து­வ­ரும் தமி­ழக சுகா­தா­ரத் துறை­யைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு இத்­தொகை தேவைப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

"மாநி­லம் முழு­வ­தும் தனி­மைப்­ப­டுத்­தும் வச­தி­களை உரு­வாக்­கு­வது, வென்­டி­லேட்­டர் வச­தி­களை அளிப்­பது, தனிப்­பட்ட நப­ரைப் பாது­காக்­கக்­கூ­டிய உப­க­ர­ணங்­களை வாங்­கு­வது உள்­ளிட்ட உள்­கட்­ட­மைப்பு மேம்­பாட்­டுக்­கா­க­வும், அமைப்பு சாரா தொழி­லா­ளர்­க­ளுக்­கும், வேலை­வாய்ப்பு உறுதி திட்­டத்­தில் பணி­யாற்­று­வோ­ருக்­கும் உதவ மத்­திய அரசு 4 ஆயி­ரம் கோடி ரூபாய் ஒதுக்­க­வேண்­டும்," என முதல்­வர் மீண்­டும் குறிப்­பிட்­டார்.