ஊரடங்கு உத்தரவை மீறிய 8,136 பேர் கைது, 1,434 வழக்குகள் பதிவு

2 mins read
1f9d9f09-23d8-4618-ac53-0cf6dac38067
-

சென்னை: கொரோனா கிருமித் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தின் பேரில் தமிழக போலிசார் 8,136 பேரைக் கைது செய்துள்ளனர். இதுதொடர்பாக 1,434 வழக்குகள் பதிவாகி உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று முன்பே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. முதல் நாளில் தேவையின்றி சுற்றித் திரிந்தவர்களை மடக்கிப் பிடித்த போலிசார் வெறும் எச்சரிக்கையுடன் அனுப்பி வைத்தனர்.

இதற்குப் பிறகும் ஊரடங்கு உத்தரவை மீறி நடமாடிய பலரை போலிசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அந்த வகையில், தமிழகம் முழுவதும் நேற்று வரை 8,136 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில் பலரிடமிருந்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும், கொரோனா கிரு­மித் தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் இருந்­தும் வீட்டை விட்டு வெளியே வந்த 6 பேரும் வதந்தி பரப்­பிய 8 பேரும் கைதாகி உள்ளனர்.

இதற்­கி­டையே ஊர­டங்கு உத்­த­ரவை மீறு­வோ­ருக்கு போலி­சார் நூதன தண்­டனை அளித்து வரு­கின்­ற­னர். இதற்­குப் பர­வ­லாக பாராட்­டும் கிடைத்து வரு­கிறது.

அர­சின் அறி­வு­றுத்­தலை மீறி வெளியே நட­மா­டும் நபர்­களை மடக்­கிப் பிடித்த போலி­சார் தோப்­புக்­க­ர­ணம் போட வைத்­த­னர். சிலர் கால் வலி, முட்டி வலி என்று புலம்­பிக் கெஞ்­சி­ய­போதும் விட­வில்லை.

பொது­மக்­களை இவ்­வாறு தண்­டிப்­பது சரி­யல்ல என்­றும் இது­தான் சூழ்­நி­லைக்கு ஏற்ற சரி­யான நட­வ­டிக்கை என்­றும் சமூக வலைத்­த­ளங்­களில் விவா­தங்­க­ளைக் கிளப்­பி­யுள்­ளது தோப்­புக்­க­ரண தண்­டனை. சில இடங்­களில் தேவை­யின்றி ஊர் சுற்ற மாட்­டேன் என்று வாக்­கு­றுதி அளிப்­ப­து­போல் சத்­தி­யம் செய்­யு­மாறு போலி­சார் உத்­த­ர­விட்­ட­னர். படம்: ஊடகம்