சிவகங்கை: கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்று காதலியைச் சந்தித்த இளையரை போலிசார் விரட்டிப் பிடித்தனர். சிவகங்கையைச் சேர்ந்த 23 வயதான அந்த இளையர் கடந்த 23ஆம் தேதி துபாயில் இருந்து மதுரை வந்தடைந்தார். இதையடுத்து விமானத்தில் வந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் தனது காதலியைச் சந்திக்க விரும்பிய அந்த இளையர் கண்காணிப்பு முகாமில் இருந்து நள்ளிரவில் தப்பிச் சென்றார். இதையடுத்து போலிசார் அவரைத் தேடிவந்த நிலையில் சொந்த ஊரில் ஒருவர் வீட்டில் தங்கியிருப்பது தெரியவந்தது. போலிசார் அவரைப் பிடித்து விசாரித்தபோது காதலியைப் பார்ப்பதற்காக முகாமிலிருந்து தப்பித்ததாகக் கூறியுள்ளார். இதையடுத்து இளம் காதல் ஜோடிக்கு நள்ளிரவு வேளையில் ஒரு கோவிலில் வைத்து உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது தெரியவந்தது.
கண்காணிப்பு முகாமில் இருந்து தப்பிய இளையர்: நள்ளிரவில் நடந்த திருமணம்
1 mins read

