500 படுக்கைகளுடன் மருத்துவமனை தயார்

2 mins read
b35efa32-0050-4480-87f0-db3c95b418d6
சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது. வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கிய மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை 500 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டு உள்ளது.

வெள்ளிக்கிழமை செயல்படத் தொடங்கிய மருத்துவமனையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அவருடன் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், அரசு உயரதிகாரிகள் இருந்தனர்.

கொரோனா கிருமியால் பாதிக்கப்பட்டவா்களின் உடல் நிலையும் நோயின் தீவிரத்தை பொறுத்தும் தனித்தனியே சிறப்பு சிகிச்சைகளை வழங்கும் வகையில் அங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கிருமி வேகமாகப் பரவி வருவதால் நோய்த் தொற்றுக்கு ஆளானவா்களுக்கு சிகிச்சை அளிக்க மாநிலம் முழு வதும் 10,000க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வாா்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

முத­லில் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்­து­வ ­மனை­யில் 30 படுக்­கை­க­ளு­டன் கூடிய சிறப்பு வாா்டு அமைக்­கப்­பட்­டது. அதைத் தொடா்ந்து, படிப்­ப­டி­யாக தமி­ழ­கம் முழு­வ­தும் அது விரி­வு­ப­டுத்­தப்­பட்­டது.

இந்த நிலை­யில் அண்­மை­யில் புதி­தா­கத் தொடங்­கப்­பட்ட ஓமந்­தூராா் மருத்­து­வக் கல்­லூரி மருத்து­வ­ம­னையை கொரோனா கிரு­மிக்­கான சிறப்பு மருத்­து­வ­ மனை­யாக மாற்ற முடிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி அதற்­கான பணி­கள் தொடங்­கப்­பட்டு முத­லில் 350 படுக்­கை­களும் பின்­னர் 500 படுக்­கை­க­ளா­க­வும் விரி­வு­ப­டுத்­தப்­பட்டு அதற்­கான வச­தி­கள் செய்­யப்­பட்­டன. முதல்­வர் காப்­பீட்­டுத் திட்­டத்­தில் இணைந்­துள்ள தனியாா் மருத்து­வ­ம­னை­கள் அனைத்­தும் தங்­க­ளு­டைய மருத்­து­வ­ம­னை­களில் 25 விழுக்­காடு படுக்­கை­களை கொரோனா கிரு­மித் தொற்று சிகிச்­சைக்கு ஒதுக்க வேண்­டும் என்று உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே தேனாம்­பேட்டை மருத்­துவச் சேவை­கள் இயக்­க­கத்­தில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய முதல்வா் பழ­னி­சாமி, தமி­ழ­கத்­தில் கொரோனா கிருமி நோய் பாதிப்பு தற்­போது முதல் கட்­டத்­தில் இருந்து இரண்­டா­வது கட்­டத்தை நோக்­கிச் சென்று கொண்­டி­ருப்­ப­தாக தெரி­வித்தாா். "அந்­தப் பாதிப்பு மேலும் பர­வா­மல் தடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­ க­ளைத்­தான் தற்­போது அரசு தீவி­ர­மாக மேற்­கொண்டு வரு­கிறது. அதற்கு மக்­கள் முழு ஒத்­து­ழைப்பு தர வேண்­டும்," என்று முதல்­வர் எடப்­பாடி பழ­னி­சாமி கேட்­டுக் கொண்­டார்.