கிருமி அச்சம்: சிறைக் கைதிகள் காணொளி வழியாக உறவினர்களுடன் பேச அனுமதி

1 mins read
aa5dcd49-429f-4afa-aa91-c99cfb822a8e
தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் காணொளி மூலம் பேச  வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காகவே 58 புதிய 'ஆண்டிராய்ட்' கைபேசிகள் வாங்கப் பட்டுள்ளன. இதன் மூலம் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் உரையாடி மகிழ்ந்து வருகின்றனர். படம்: ஊடகம் -

சென்னை: கொரோனா கிருமித் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிறையில் உள்ள கைதிகளும் தனித்தனியாக வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்களை குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் காண அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயத்தில் மாற்று ஏற்பாடுகளை சிறை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

இதன்படி தமிழகத்தில் உள்ள சிறைகளில் உள்ள கைதிகள் தங்களது குடும்பத்தினருடன் காணொளி மூலம் பேச வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்காகவே 58 புதிய 'ஆண்டிராய்ட்' கைபேசிகள் வாங்கப் பட்டுள்ளன. இதன் மூலம் கைதிகள் தங்கள் உறவினர்களுடன் உரையாடி மகிழ்ந்து வருகின்றனர்.