தடை உத்தரவு: 100,000 பேர் தவிப்பு; அரசுக்கு அவசர கோரிக்கை

தடை உத்தரவு: 100,000 பேர் தவிப்பு; அரசுக்கு அவசர கோரிக்கை

2 mins read
2496417f-1265-4e8a-9fe8-f32c03f31e73
இவரைப் போன்ற ஆதரவற்றவர்கள் தமிழகத்தில் 100,000 பேர் இருப்பதாகவும் தடை உத்தரவு காரணமாக இவர்களில் பலருக்கும் ஒரு வேளைகூட உணவு கிடைக்கவில்லை என்றும் தொண்டூழிய அமைப்புகள் கூறுகின்றன. இத்தகைய மனிதர்கள் ஒருபுறம் இருக்க, நாய், பூனை, கால்நடைகள் போன்ற விலங்குகளும் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம் -

சென்னை: கொரோனா கிரு­மித்­தொற்றைக் கட்­டுப்­ப­டுத்தி அவற்றை ஒழிக்­கும் முயற்­சி­யாக தமி­ழ­கத்­தில் இப்­போது 21 நாள் ஊர­டங்குக் கட்­டுப்­பாடு நடப்­பில் இருக்­கிறது.

அந்­தக் கட்­டுப்­பாடு கார­ண­மாக மாநி­லத்­தில் சுமார் 100,000 பேர் உண­வின்றி தவிக்­கும் நிலை ஏற்­பட்டு இருப்­ப­தா­க­வும் தேவை­யான அள­வுக்­குக் கட்­டுப்­பா­டு­களைத் தளர்த்தி உட­ன­டி­யாக அவர்­க­ளுக்கு அரசு உதவ வேண்­டும் என்­றும் தொண்­டூ­ழிய அமைப்­பு­கள் கோரிக்கை விடுத்துள்ளன.

தடை உத்­த­ரவு கார­ண­மாக பாதிக்­கப்­பட்டு இருப்­போ­ரில், பிள்ளை­க­ளால் கைவி­டப்­பட்ட பெற்­றோர்­கள், வீடு­களில் இருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்ட மன­நோ­யா­ளி­கள், வீடற்ற மக்­கள், உழைத்து பிழைக்க இய­லாத மாற்­றுத் திற­னா­ளி­கள் போன்ற பல­ரும் அடங்­கு­வர் என்று தொண்­டூ­ழிய அமைப்­பு­கள் தெரி­வித்து இருக்­கின்­றன.

சென்­னை­யில் இப்­ப­டிப்­பட்ட 15,000 பேர் உண­வின்றி தவிப்­ப­தா­க­வும் மாநி­லம் முழு­வ­தும் மொத்­தம் 100,000க்கும் மேற்­பட்­டோர் கடும் பாதிப்­புக்கு இலக்­காகி இருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

அவர்­களில் பலர் உட­லில் போதிய தெம்பு இன்றி சாலை ஓரங்­க­ளி­லும் இதர பகு­தி­க­ளி­லும் படுத்த படுக்­கை­யா­கக் கிடப்­ப­தால் அவர்­க­ளுக்கு உதவ நினைத்­தும் தடை உத்­த­ரவு கார­ண­மாக தொண்­டூ­ழிய நிறு­வ­னங்­க­ளால் உதவ முடி­ய­வில்லை என்­றும் கூறப்­ப­டு­கிறது.

மனி­தர்­கள் ஒரு­பு­றம் இருக்க, தெருக்­களில் திரி­கின்ற நாய், பூனை, கால்­ந­டை­கள் உள்­ளிட்ட விலங்­கு­களும் உண­வின்றி தவிப்­ப­தா­க­வும் சில இடங்­களில் விலங்கு­கள் மடிந்­து­விட்­ட­தா­க­வும் தக­வல்­கள் கூறு­கின்­றன.

தடை உத்­த­ரவு இருந்­தா­லும் வீடற்ற முதி­யோர், மன­நிலை பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் போன்­ற­வர்­கள் காப்­ப­கத்­தில் பாது­காப்­பாக வைக்­கப்­ப­டு­வார்­கள் என்று அர­சாங்­கம் தெரி­வித்து இருக்­கிறது என்­றாலும் இன்­ன­மும் அவர்­களில் பல­ரும் சாலை­க­ளி­லேயே பொழு­தைக் கழிப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அவர்­க­ளுக்கு நேர­டி­யாக உணவு வழங்­கக் கூடாது என்று கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு இருப்­ப­தால் தொண்­டூ­ழிய நிறு­வ­னங்­கள் தவிப்­ப­தா­க­வும் ஆகை­யால் அர­சாங்­கம் உட­ன­டி­யா­கக் கட்­டுப்­பா­டு­க­ளைத் தளர்த்த வேண்­டும் என்­றும் அத்­த­கைய அமைப்­பு­கள் கோரிக்கை விடுத்­துள்­ளன.

இந்த நில­வ­ரம் பற்றி கருத்து கூறிய சில தொண்­டூ­ழிய அமைப்­பு­கள், இத்­த­கைய ஆத­ர­வற்ற மக்­களில் பலர் இரண்டு நாட்­க­ளா­கப் பட்­டினி கிடக்­கி­றார்­கள் என்று கூறுகின்றன. ஆகை­யால் அவர்­களுக்கு உட­னடி உதவி தேவை என்று அந்த அமைப்­பு­கள் அவ­சர குரல் கொடுத்து வரு­கின்­றன.