ஊரடங்கை மீறிய 33,000 பேர் கைது; உடற்பயிற்சி தண்டனை

சென்னை: தமி­ழ­கத்­தில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறிய குற்­றத்­திற்­காக 28,897 பேர் மீது வழக்­கு­கள் பதிவு செய்­துள்ள போலி­சார், 33,006 பேரைக் கைது செய்­துள்­ள­னர்.

கைதா­ன­வர்­களில் சில­ருக்கு உடற்­ப­யிற்சி, கொரோனா குறித்து தேர்வு எழு­தும் தண்­டனை வழங்­கப் பட்டு, மாலை­யில் விடு­விக்­கப்­பட்ட தாக­வும் ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

வாகன ஓட்­டி­கள், தேவை­யின்றி வெளி­யில் சுற்­றி­ய­வர்­க­ளி­டம் இருந்து ரூ.13.99 லட்­சம் அப­ரா­தம் வசூல் செய்­துள்­ள­து­டன் 23,691 வாக­னங்­க­ளை­யும் பறி­மு­தல் செய்­துள்­ள­னர்.

பூந்­த­மல்­லி­யில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறி பிடி­பட்ட இளைஞா்களை உடல் வலி­யி­னால் அவர்­கள் தளா்வ­டை­யும் வரை­யில் போலி­சார் உடற்­ப­யிற்சி செய்யவைத்­தனா். இத்­தண்­ட­னைக்­குப் பிறகு போலி­சார் விடு­வித்­த­தும் இளை­ஞா்­கள் அங்­கி­ருந்து தலைதெறிக்க ஓடினா்.

இதே­போல புளி­யந்­தோப்­பில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறி வாக னங்­களில் உலா வந்த இளை ஞா்களைப் பிடித்த போலி­சார் அவா்க­ளது முட்டி வலி எடுக்­கும் வரை­யில் தோப்­புக்­க­ர­ணம் போட வைத்து திகைக்­க­வைத்­தனா்.

வியா­சா்­பா­டி­யில் ஊர­டங்கு உத்­த­ரவை பின்­பற்­றும்­படி போலிசாா் பாடிய கானா பாடல் ஒலி­பெ­ருக்கி மூலம் ஒலி­ப­ரப்­பப்­ப­டு­கிறது.

கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­தில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறு­வோரை போலி­சார் பிடித்து, அவா்க­ளுக்கு கொரோனா குறித்த கேள்­வி­கள் அடங்கி வினாத்­தாளை கொடுத்து தோ்வு எழுத வைக்­கின்­றனா்.

இதன்­மூ­லம் ஊர­டங்கை மீறு­வோ­ருக்கு தண்­டனை வழங்­கப்­படு­வ­தோடு, கொரோனா குறித்த விழிப்­பு­ணா்­வை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தாக போலி­சார் தெரி­விக்­கின்­றனா்.

திரு­நெல்­வே­லி­யில் ஊர­டங்கு உத்­த­ரவை மீறு­வோரை தமிழ்த்­தாய் வாழ்த்­தும் திருக்­கு­ற­ளும் கூற வைத்து அறி­வுரை வழங்­கு­கின்­றனா்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!