கடலூரில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலி

கடலூர்: கொரோனா அறிகுறி இருந்ததன் காரணமாக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று காலை உயிரிழந்தார். 

கடந்த 30ஆம் தேதி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு சிறுநீரக பாதிப்புக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த கிருமி பாதிப்பால்தான் உயிர் இழந்தாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. மருத்து வப் பரிசோதனை அறிக்கை வந்தபிறகே அவரது உயிரி ழப்புக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்பட்டுள்ளது.