இன்றுமுதல் ரூ.1,000 விநியோகம்

2 mins read
20014805-a7cc-4d0a-8276-cfcae3f8ec9e
ஹைதராபாத்தில் விநியோகிக்கப்படும் இலவச அரிசியை வாங்க குறிப்பிட்ட சமூக இடைவெளியை விட்டு அமர்ந்திருக்கும் மக்கள். படம்: ஏஎஃப்பி -

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இன்று வியாழன் முதல் ரூ.1,000 ரொக்கப் பணம் விநியோகம் செய்யப்பட உள்ளது. அத்துடன் ஏப்ரல் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களான சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் அனைவரும் வெளிநடமாட்டம் இன்றி வீடுகளில் முடங்கியுள்ளனர்.

இந்நிலையில் அன்றாட ஊழி யர்கள் போதிய வேலை வாய்ப்பின்றி, சாப்பாட்டுக்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து அவர்­க­ளுக்கு நிவா­ரண உதவி வழங்­கும் வகை­யில் அனைத்து அரிசி ரேஷன் அட்­டை­தா­ரர்­க­ளுக்­கும் ரூ.1,000 நிவா­ரண உத­வி­யாக வழங்­கப்­படும் என்று சட்­ட­ச­பை­யில் முதல்­வர் பழ­னி­சாமி அறி­வித்­தி­ருந்­தார்.

அத்­து­டன் ஏப்­ரல் மாதத்­திற்­கான அரிசி, சர்க்­கரை, துவ­ரம் பருப்பு, கோதுமை, சமை­யல் எண்­ணெய் ஆகி­ய­வை­யும் இல­வ­ச­மாக வழங் கப்­படும் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

இதைத்­தொ­டர்ந்து, இன்­று­மு­தல் ரேஷன் கடை­களில் இவற்றை வழங்க உள்­ள­னர்.

தமி­ழ­கத்­தில் மொத்­தம் அரிசி பெறும் ரேஷன் அட்­டை­தா­ரர்­கள் ஒரு கோடியே 88 லட்­சத்து 29 ஆயி­ரத்து 73 பேர் உள்­ள­னர்.

இவர்­க­ளுக்கு தலா ரூ.1,000 நிவா­ரண உதவி வழங்­கு­வ­தற்­காக ரூ.1,882 கோடியே 90 லட்­சத்து 73 ஆயி­ரம் நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.

அரிசி ரேஷன் அட்­டை­தா­ரர்­க­ளுக்கு இரண்டு 500 ரூபாய் நோட்­டு­க­ளாக வெளிப்­ப­டை­யாக தலா ரூ.1,000 வழங்க உள்­ள­னர்.

தற்போது கொரோனா நோய் பரவும் அச்சம் இருப்பதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவு அரசு தரப்பில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் தினமும் 100 ரேஷன் அட்டைகளுக்கே ரூ.1,000 மற்றும் ஏப்ரல் மாத பொருட்கள் வழங்கப்பட உள்ளன. அடுத்த 15 நாட்களுக்கு இது தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.