தமிழக அரசு: 234 பேருக்கு கொரோனா கிருமித் தொற்று

சென்னை: தமி­ழ­கத்­தில் கொரோனா கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 234ஆக அதி­க­ரித்­துள்­ளது. இவர்­க­ளுள் 190 பேர் அண்­மை­யில் டெல்­லி­யில் நடை­பெற்ற சமய மாநாட்­டில் பங்­கேற்­ற­வர்­கள் என மாநில சுகா­தா­ரத் துறைச் செய­லர் ஷீலா ராஜேஷ் தெரி­வித்­துள்­ளார்.

சென்­னை­யில் நேற்று முன்­தி­னம் செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்த அவர், கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை டெல்­லி­யில் நடை­பெற்ற சமய மாநாட்­டில் தமி­ழ­கத்­தில் இருந்து 1,131 பேர் கலந்து கொண்­ட­தா­கக் குறிப்­பிட்­டார்.

இவர்­களில் 80 பேருக்கு நோய்த்­தொற்று இருப்­பது இரு தினங்­க­ளுக்கு முன் தெரியவந்­தது. இதை­ய­டுத்து மாநாட்­டில் பங்­கேற்ற அனை­வ­ருக்­கும் மருத்­து­வப் பரி­சோ­தனை மேற்­கொள்ள சுகா­தார அமைச்சு முடிவு செய்­தது.

எனி­னும் மாநாட்­டில் பங்­கேற்­ற­வர்­களில் 515 பேரை மட்­டுமே அடை­யா­ளம் காண­மு­டிந்­தது. இந்­நி­லை­யில் அர­சின் கோரிக்­கையை ஏற்று சிலர் தாமாகவே முன்­வந்து மருத்­து­வப் பரி­சோ­தனைகளை மேற்­கொண்­ட­னர். அவர்­க­ளுக்கு நன்றி தெரி­விப்­ப­தாக ஷீலா ராஜேஷ் தெரி­வித்­தார்.

தமி­ழ­கத்­தில் தற்­போது 77,330 பேர் வீட்­டுக் கண்­கா­ணிப்­பில் உள்­ள­தா­க­வும் சுமார் 4 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் 28 நாட்­கள் வீட்­டுக் கண்­கா­ணிப்பை முடித்­தி­ருப்­ப­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார்.

“தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுப் பரிசோதனைக்காக 11 அரசு ஆய்வு மையங்கள் மற்றும் 6 தனியார் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், மேலும் ஆறு நோய்த்தொற்று பரிசோதனை மையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!