பத்து நாட்களில் ஒன்றரை லட்சம் முகக் கவசங்கள் தயாரித்த புழல் சிறைக்கைதிகள்

பத்து நாட்களில் ஒன்றரை லட்சம் முகக் கவசங்கள் தயாரித்த புழல் சிறைக்கைதிகள்

2 mins read
e3cd5d12-2104-4d01-9fc6-aa5f73f411ba
முகக் கவசம் தயாரிக்கும் கைதிகள். படம்: தகவல் ஊடகம் -

சென்னை: புழல் மத்­திய சிறை­யில் உள்ள கைதி­கள் ஒன்­றரை லட்­சம் முகக் கவ­சங்­க­ளைத் தயா­ரித்­துள்­ள­னர். கடந்த 10 நாட்­க­ளாக கைதி­கள் இந்­தப் பணி­யில் ஈடு­பட்­ட­தாக சிறைத்­துறை அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

கொரோனா கிரு­மித் தொற்­றைத் தவிர்க்க முகக் கவ­சங்­கள் அணி­வது அவ­சி­யம் என அறி­வுறுத்­தப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து தமி­ழ­கம் முழு­வ­தும் மருத்­து­வர்­கள் பரிந்­து­ரைத்த முகக் கவ­சங்­கள் வேக­மாக விற்­றுத் தீர்ந்­தன. இத­னால் அவற்­றுக்­குத் தட்­டுப்­பாடு நில­வு­கிறது.

இதை­ய­டுத்து புழல் மத்­திய சிறை­யில் உள்ள கைதி­களை முகக் கவ­சம் தயா­ரிக்­கும் பணி­யில் ஈடு­படுத்த சிறைத்­துறை முடிவு செய்­தது. அதன்­படி கடந்த மார்ச் 21ஆம் தேதி­யில் இருந்து புழல் சிறைக் கதை­கள் முகக்­க­வச தயா­ரிப்­பில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர்.

கடந்த 10 தினங்­களில் மட்­டும் அவர்­கள் ஒன்­றரை லட்­சம் முகக் கவ­சங்­க­ளைத் தயா­ரித்­துள்­ள­னர். கடந்த செவ்­வாய்க்­கி­ழமை ஒரு நாள் மட்­டும் 35 ஆயி­ரம் முகக் கவ­சங்­கள் தயா­ரா­கின.

இவற்­றுள் 75 விழுக்­காடு முகக்­க­வ­சங்­கள் காவல்­து­றைக்கு வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் மீத­முள்­ளவை சுகா­தா­ரத் துறை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

இதே­போல் சென்னை ஆயு­தப்­படை பெண் போலி­சா­ரும் முகக்­க­வ­சங்­கள் தயா­ரிக்­கும் பணியை மேற்­கொண்­டுள்­ள­னர். பாது­காப்­புப் பணி­யில் ஈடு­படும் போலி­சா­ருக்­குப் போது­மான அள­வில் முகக்­க­வ­சங்­கள் கிடைக்­க­வில்லை என்று ஊட­கங்­களில் செய்தி வெளி­யா­னது.

இதையடுத்து தையல் தொழில் தெரிந்த 30 பெண் போலிசார் தங்கள் வீட்டில் உள்ள தையல் இயந்திரங்களைக் கொண்டுவந்து ஒரே இடத்தில் வைத்து முகக்கவசம் தயாரிக்கும் பணியைத் தொடங்கி உள்ளனர். முதற்கட்டமாக 60 ஆயிரம் முகக் கவசங்களைத் தயாரித்து காவல்துறைக்கு வழங்குவதே தங்கள் இலக்கு என அவர்கள் தெரிவித்தனர்.

இந்தப் பணியில் 10 ஆண் போலிசாரும் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு தினந்தோறும் 2 ஆயிரம் முகக்கவசங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.