825 கட்டடம்; 51,000 படுக்கை வசதி

சென்னை: தமி­ழ­கத்­தில் 234 பேரை பீடித்­துள்ள கொரோனா கிரு­மித் தொற்று இன்னும் தீவி­ர­ம­டை­ய­லாம் என்ற அச்­சம் உரு­வா­கி­யுள்­ள நிலையில், இதை மேலும் பர­வ­ விடா­மல் கட்­டுக்குள் வைக்க தமிழக அரசின் 825 புதிய கட்­ட­டங்­கள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா தனி­மைப்­ப­டுத்­தும் வார்­டு­களாக இந்தக் கட்டடங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. தமி­ழ­கத்­தின் 38 மாவட்­டங்க ளில் செங்­கல்­பட்டு, கள்­ளக்­கு­றிச்சி, திருப்­பத்­தூர் ஆகிய மாவட்­டங்­க­ளைத் தவிர, மற்ற 35 மாவட்­டங்­களிலும் 825 புதிய கட்­ட­டங்­கள் தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளன.

கொரோனா கிருமிப் பர­வ­லால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளை­யில், இந்தக் கட்டடங்களில் 51,000 படுக்கை வச­தி­களை அமைக்க உள்­ளனர்.

உல­கத்­தையே உலுக்கி வரும் கொரோனா கிருமி பாதிப்­பால் நேற்று மாலை நேரத்­து­டன் 47,000க்கும் மேலா­னோர் உயிரிழந்­தனர். இந்த பாதிப்பு தமிழகத்­தை­யும் விட்டுவைக்­கா­மல் 234 பேர் சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

சென்னை மாவட்­டத்­தில் 7 கட்­ட­டங்­களில் 3,702 படுக்கைகளும் காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் 2 கட்­ட­டங்­களில் 66 படுக்­கை­களும் திரு­வள்­ளூர் மாவட்­டத்­தில் 5 கட்ட டங்­களில் 480 படுக்­கை­களும் அமைக்­கப்­பட உள்­ளன.

ஆகமொத்­தத்­தில் தமி­ழ­கத்­தின் 35 மாவட்­டங்­களில் 825 புதிய கட்­டடங்­களில் 14 லட்­சத்து 6 ஆயி­ரம் சது­ர­மீட்­டர் பரப்­ப­ள­வில் 51,000 படுக்கை வசதிகளை தமிழக அரசு ஏற்­ப­டுத்த உள்ளது.

இதற்­கி­டையே கதர் மற்­றும் தொழில்­துறை அமைச்­சர் பாஸ்­கரன், சிவ­கங்கை மாவட்ட ஆட்­சி­யர் ஜெயகாந்­தன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் நெட்­டூர் நாக­ரா­ஜன் உள்­ளிட்­டோர் மானா­ம­துரை, திருப்­பு­வ­னம் அரசு மருத்­து­வ­ம­னை­களில் ஆய்வு நடத்­தி­ இல­வ­ச­மாக முகக்­ க­வ­சங்களை வழங்­கினர். ஆனால் ஆய்­வின்­போது அமைச்­சர்களும் அதி­கா­ரி­களும் சமூக இடை­ வெளி­யைப் பின்­பற்­றா­மல் கூட்­ட­மாக வந்­த­தாக சமூக ஆர்­வ­லர்­கள் குற்­றம் சாட்டி உள்­ள­னர்.

இதையடுத்து சமூக இடைவெளி யில் மறவாமல் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!