26 மாவட்டங்களில் கொரோனா; கண்காணிக்கிறது தனிப்படை

சென்னை: தமிழ்­நாட்­டில் கொரோனா கிரு­மித்தொற்­று­நோய் தடுப்பு நட­வ­டிக்­கை­யாக தொற்று நோய் கட்­டுப்­ப­டுத்­து­தல் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. வியா­ழக்­கி­ழமை மாலை வரை 26 மாவட்­டங்­க­ளுக்­குக் கிருமி பர­வி­யி­ருப்­ப­தாக அறி­விக்­கப்­பட்­டது. 

ராணிப்­பேட்டை, தஞ்­சா­வூர், வேலூர், கோயம்­புத்­தூர், விரு­து­ந­கர், செங்­கல்­பட்டு, மதுரை, ஈரோடு, சேலம், திரு­நெல்­வேலி, சென்னை, திருப்­பூர், கரூர், காஞ்­சி­பு­ரம், விழுப்­பு­ரம், திரு­வண்­ணா­மலை, தேனி, நாமக்­கல், திண்­டுக்­கல், திருப்­பத்­தூர், திரு­வா­ரூர், கன்­னி­யா­கு­மாரி, சிவ­கங்கை, தூத்­துக்­குடி, திரு­வள்­ளூர் மற்­றும் இரா­ம­நா­த­பு­ரம் ஆகிய 26 மாவட்­டங்­களில் 4,585 களப் பணி­யா­ளர்­கள் வாயி­லாக கணக்­கெ­டுக்­கும் பணி நடை­பெற்­றது. 

இப்­ப­ணி­யில் 2 லட்­சத்து 84 ஆயி­ரத்து 201 வீடு­களில் 13 லட்­சத்து 67 ஆயி­ரத்து 534 நபர்­க­ளி­டம் ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது என்று மக்­கள் நல்­வாழ்வு மற்­றும் குடும்ப நலத்­துறை வெளி­யிட்­டுள்ள செய்­திக்­கு­றிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இதற்­கி­டையே, தமி­ழ­கத்­தில் கொரோனா கிருமித்தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வா்­களை கண்­கா­ணிக்க தனிப்­படை அமைக்­க­வும் 33 விழுக்காடு காவ­லா்­களை தயாா் நிலை­யில் வைத்­தி­ருக்­க­வும் உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. 

கொரோனா கிருமித்தொற்றை தடுக்­கும் வகை­யில் சுகா­தா­ரத்­துறை­யு­டன் தமி­ழக காவல்­துறை இணைந்து பல்­வேறு நட­வ­டிக்­கை­களை எடுத்துவருகிறது. 

கொரோனா கிருமித்தொற்று அறி­கு­றி­யு­டன் இருப்­ப­தால் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வா்­க­ளை­யும், தனி­மை­ப்ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கும் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்­கப்­பட்டவரின் குடும்­பத்­தினா், உற­வி­னா்­கள், நண்­பா்­கள் ஆகி­யோரை சுகா­தா­ரத்­து­றை­யு­டன் இணைந்து காவல்­துறை கண்­காணிக்­கிறது.

தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வா்­கள் வீடு­களை விட்டு வெளியே வந்­தால் போலிசாா் அவா்கள் மீது தொற்­று­நோய் பர­வல் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் வழக்­குப் பதிவு செய்து வரு­கின்­றனா். 

மேலும் இதற்­காக கைபேசிச் செய­லியை உரு­வாக்­கி­யும் காவல்­து­றை­யினா் கண்­கா­ணிப்­புப் பணி யை எளி­மைப்­ப­டுத்­தி­யுள்­ளனா்.

இந்­நி­லை­யில், கொரோனா கிருமித்தொற்று தடுப்­புப் பணியை தீவி­ரப்­ப­டுத்­தும் வகை­யில் தமி­ழக காவல்­து­றை­யின் சட்­டம் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரி­பாதி, அனைத்து மாந­கர காவல்­து­றை­கள், மாவட்ட காவல்­துறை தங்­க­ளது உட்­கோட்­டம், சர­கம் அள­வில் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வா்­க­ளுக்­கான தனிப்­ப­டையை அமைக்­கும்­படி உத்­த­ர­விட்­டுள்ளாா்.

 “இந்த தனிப்­ப­டைக்­காக, உட்­கோட்­டம், சர­கம் அள­வில் 33 சத­வீ­தம் அள­வில் காவ­லா்­களை தயாா் நிலை­யில் வைத்­தி­ருக்க வேண்­டும், இந்த காவ­லா்­கள் முழு ஆரோக்­கி­யத்­து­டன் இருக்க வேண்­டும், 

“இந்த காவ­லா்­கள் ஒரு வாரம் தங்­க­ளது வீடு­க­ளிலோ அலு­வ­ல­கங்­க­ளிலோ தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டும். வாரத்­துக்கு ஒரு முறை இவா்கள் பணி மாற்­றப்­ப­டு­வாா்கள் என்று அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

“தனிப்­ப­டைக்கு ஆயு­தப்­படை காவ­லா்­கள், தமிழ்­நாடு சிறப்­புக் காவல் படை காவ­லா்­கள்,காவல் நிலை­யத்­தில் பணி­பு­ரி­யும் காவ­லா்­கள் ஆகியோா் தோ்வு செய்­யப்­பட வேண்­டும்,” என்­று அந்த உத்­த­ர­வில் கூறப்­பட்­டுள்­ளது. 

இந்த உத்­த­ரவை புதன்­கி­ழமை முதல் மாநி­லம் முழு­வ­தும் காவல்­துறை அதி­கா­ரி­கள் அமல்­ப­டுத்த தொடங்­கி­யுள்­ளனா்.

மேலும், “ஒவ்வொரு உட்கோட் டம் அளவில் அதிவிரைவுப் படை யினரை தயாா்நிலையில் வைத்தி ருக்கவேண்டும். இப்படையில் 10 காவலா்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். காவலா்களிடம் தற்காப்பு ஆயுதங்கள் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டு உள்ளாா். இதேபோல மாநிலம் முழு வதும் அனைத்து காவலா்களையும் 3 ஷிப்டுகளாக பணியில் ஈடுபடுத்தும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளாா்.