விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், மும்பையிலுள்ள சந்தோஷ் நகரில் கூடாரங்கள் அமைத்து கேபிள் புதைக்கும் பணி செய்துவந்துள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அவர்கள் உணவுக்கே வழியில்லாமால் தவித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்த விஷயத்தில், தமிழக அரசு தலையிட்டு தங்களை சொந்த ஊருக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
மும்பையில் தவிக்கும் தமிழர்கள்; சொந்த ஊர் திரும்ப கோரிக்கை
1 mins read