கிருமி பரவாமல் கட்டுப்படுத்த 3,963 கைதிகள் விடுதலை

சென்னை: கொரோனா கிருமி மேலும் பர­வா­மல் கட்­டுப்­ப­டுத்­தும் வகை­யில் தமி­ழ­கம் எங்­கும் உள்ள சிறை­களில் அடைக்­கப்­பட்­டி­ருந்த 3,963 கைதி­கள் பிைணயில் விடு விக்­கப்­பட்டு உள்­ள­னர்.

போலி­சார் அவர்­களை காவல் துறை வாக­னங்­களில் அழைத்­துச் சென்று அவர்களது வீடுகளில் விட்­டு­வ­ரு­வ­தால் கைதி­கள் நெகிழ்ச்சி அ­டைந்­துள்­ள­னர்.

உல­கத்­தையே அச்­சு­றுத்தி வரும் இந்தக் கிரு­மி­யால் நேற்றுடன் 54,000 பேர் உயி­ரி­ழந்துள்ளனர்.

இந்த கிரு­மி­யைக் கொல்­வ­தற்கு மருந்­து­கள் எது­வும் கண்டுபிடிக்­கா­மல் உள்ள நிலை­யில், மக்­கள் பாதுகாப்பான இடைவெளி விட்டு தனித்­தி­ருப்­பதே உயிர் அழி­வைக் கட்­டுப்­ப­டுத்த இப்­போ­தைய தீர்­வாக அமை­யும் என்று கூறப்­படு­கிறது.

இந்­நி­லை­யில் தமி­ழக சிறை­களி­லும் கொரோனா தடுப்பு நட­வ­டிக்­கை­கள் சிறைத்­துறை தலை­வர் டிஜிபி சுனில்­கு­மார் ­சிங் மேற்­பார்­வை­யில் நடந்துவரு­கிறது.

கொரோனா தடுப்பு முன்­னெச்­ச­ரிக்கை நடவடிக்­கை­யாக கடந்த 10 நாட்­களில் 3,963 கைதிகள் பிணை­யில் விடு­விக்­கப்­பட்டனர்.

தமிழக சிறை­களில் உள்­ள­வர்­களில் 70% விசா­ர­ணைக் கைதி­கள், 30% தண்­ட­னைக் கைதி­க­ள். இவர்கள் கூட்­ட­மாக ஒரே இடத்­தில் இருப்­ப­தால் அவர்­க­ளுக்கு இந்தக் கிருமி பரவு­ம் அபாயம் அதி­கம் உள்ளதால் அவர்களைப் பிணையில் வெளியே அனுப்ப நீதிமன்றம் உத்­த­ர­விட்டதன் பேரில் சிறைத்­துறை அதி­கா­ரி­கள் நட­வ­டிக்­கை­கள் எடுத்து வரு­கின்­ற­னர்.

அது தொடர்­பாக சிறைத்­துறை உய­ர­தி­காரி ஒரு­வர் கூறுகையில், ‘‘தமி­ழ­கச் சிறை­களில் விசா­ர­ணைக் கைதி­க­ளாக அடைக்­கப்­பட்­டுள்ள 50% கைதி­கள் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த இரு தினங்களில் சென்னை புழல் சிறை­யில் இருந்து 200 கைதி­கள் பிணை யில் விடு­த­லை­யாகி வீட்­டுக்குச் சென்றுவிட்­ட­னர். இத­னால் சிறை­களில் கைதி­க­ளின் கொள்­ளவு குறைந்­துள்­ளது. மீதமுள்ள கைதி­களி­டையே சமூக இடை­வெளி பின்­பற்­று­தல், கை கழு­வு­தல் உள்­பட சுகா­தா­ர விதி­க­ளை­க் கடைப்­பி­டிக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. உடல்நலம் பாதிப்­ப­டை­யும் நோயா­ளி­க­ளுக்கு உட­ன­டி­யாக மருத்­து­வப் பரி­சோ­தனைகளும் நடத்­தப்­ப­டு­கிறது,’’ எனத் தெரி­வித்­துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!