செடிகளிேலயே வீணாகும் எட்டு டன் மல்லிகைப் பூக்கள்

2 mins read
32ddb950-0e92-4972-8920-80edb400e4b6
ஊர­டங்கு உத்­த­ர­வால் வெளி­மா­நி­லங்­கள் மூலம் வெளி­நா­டு­க­ளுக்­கான ஏற்­று­ம­தி­யும் உள்­ளுர் வர்த்­த­க­மும் குறைந்ததால் மல்லிகைபபூக்கள் பறிக்கப்படாமல் விடப்படுவதாகக் கூறப்படுகிறது. படம்: ஊடகம் -

சேலம்: கிருஷ்­ண­கி­ரி­யில் எட்டு டன் மல்­லி­கைப் பூக்­கள் வீணாகி வரு­கிறது. இத­னால் விவ­சா­யி­கள் நாள்­தோ­றும் பல லட்ச ரூபாய் இழப்பை சந்­தித்து வரு­கின்­ற­னர்.

கிருஷ்­ண­கிரி, காவே­ரிப்­பட்­ட­ணம், அவ­தா­னப்­பட்டி, நாட்­டாண்­மைக்­கொட்­டாய், மலை­யாண்ட அள்ளி, வேலம்­பட்டி, போச்­சம்­பள்ளி, மத்­தூர் உட்­பட மாவட்­டத்­தின் பல்­வேறு பகு­தி­யில் ஆயி­ரக்கணக்கான ஏக்­கர் பரப்­ப­ள­வில் மல்­லி­கைப் பூக்­கள் சாகு­படி செய்­யப்­ப­டு­கின்­றன.

இங்கு சாகு­படி செய்­யப்­படும் மல்­லிகைப் பூக்­கள் சரக்கு வாக­னங்­களில் பெங்­க­ளூரு சந்­தைக்கு விற்­ப­னைக்கு அனுப்­பப்­ப­டு­கிறது.

அங்கு ஏலத்­தில் பூக்­கள் விற்­கப்­பட்டு உள்­நாடு மற்­றும் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ ப­டு­கிறது.

ஆனால் தற்­போது கொரோனா கிருமி நோய்த் தொற்று கார­ண­மாக ஊர­டங்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தால் மல்­லி­கைப் பூக்­கள் சாகு­படி செய்­யும் விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து பேசிய விவ­சாயி ஒரு­வர், "பெங்­க­ளூரு சந்­தைக்கு தின­மும் 10 டன் பூக்­களும் விழாக்­கா­லங்­களில் அதி­க­பட்­சம் 20 டன் பூக்­களும் விற்­ப­னைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­றன. கடந்த பத்து நாட்­க­ளாக ஊர­டங்கு உத்­த­ர­வால் வெளி­மா­நி­லங்­கள் மூலம் வெளி­நா­டு­க­ளுக்­கான ஏற்­று­ம­தி­யும் உள்­ளுர் வர்த்­த­க­மும் முற்­றி­லும் முடங்­கி­யுள்­ளது," என்­றார்.

இத­னால் நாள்­தோ­றும் விற்­ப­னைக்கு அனுப்பி வைக்­கப்­படும் மல்­லி­கைப் பூக்­கள் பறிக்­கப்­ப­டா­மல் அப்­ப­டியே விடப்­பட்­டுள்­ளது.

இத­னால் பூக்­கள் மலர்ந்து செடி­க­ளி­லேயே வீணாகி வரு­கின்­றன.

இத­னால் ஒவ்­வொரு நாளும் சுமார் ரூ.30 லட்­சத்­திற்கு மேல் இழப்பு ஏற்­பட்டு வரு­கிறது. எனவே, மலர் பயிரிடுபவர்களுக்கு உரிய இழப்­பீடு வழங்க அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்" என்­ற­னர்.

இது குறித்து விளக்­கிய தோட்­டக்­க­லைத்­துறை அலு­வ­லர்­கள், "எட்டு டன் மல்­லி­கைப் பூக்­கள் பறிக்­கப்­ப­டா­மல் செடி­க­ளி­லேயே உள்­ளது. இரண்டு டன் பூக்­கள் திருப்­பத்­தூர் பகு­தி­யில் வாசனை திர­விய தொழிற்­சா­லைக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­கிறது" என்றார்.