தமிழகத்தில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

தமிழகத்தில் ஐந்தாவது நபர் உயிரிழப்பு

1 mins read
1ed02c4e-e126-4d87-9860-fe2e72ac5c21
சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ரோபோட்டிக் தாதியர், மருந்து மற்றும் உணவுகளை எடுத்துச்சென்று கொடுப்பது சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதனை அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார். படம்: ஊடகம் -

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித் தொற்று ஐந்தாவது உயிரை காவு வாங்கியுள்ளது.

உயிரிழந்த ஐந்தாவது நபர் 61 வயது ஆடவர் என்றும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இதுவரை ஊரடங்கை மீறியதாக திருச்சி மாவட்டத்தில் மட்டும் 18,537 போ் மீது வழக்கு பதிவாகி உள்ளதாக அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ஜியாவுல் ஹக் தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படும் கொரோனா கிருமித்தொற்று சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளின் பொழுதுபோக்குக்காக தொலைக்காட்சி வசதி ஏற்பாடு செய்யப்படும் என்றும், நோயாளிகளுக்கு சத்தான உணவு வழங்கப்படுகிறது என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.