சென்னை: இடும்பாவனம், அடஞ்சவிளாகம் பகுதியில் குடிசை கள் அமைத்து வசித்து வரும் 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் ஊரடங்கு உத்தரவால் உணவுக்கு வழியின்றி சில நாட்களாக அல்லாடி வருவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவர் சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டிருந் தார். இது குறித்து தகவலறிந்த முதல்வர் பழனிசாமி, நரிக்குறவர்களில் ஒருவரது கைபேசி எண்ணை பகிர்ந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலளித்தார். நாம் தமிழர் நிர்வாகி இரண்டு கைபேசி எண்களை தெரிவிக்க, அரசு சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பலரும் முதல்வரைப் பாராட்டி உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கோரிக்கை: நடவடிக்கை எடுத்த முதல்வர்
1 mins read
எவ்வளவு சொன்னாலும், சிலர் கேட்பதில்லை. இனிமேல் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று பொதுமக்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரித்துள்ளார். -

