பெண்கள் மீதான குடும்ப வன்முறை அதிகரித்ததாக தகவல்

சென்னை: ஊர­டங்கு உத்­த­ர­வால் அனை­வ­ரும் வீட்­டில் இருப்­ப­தால் பெண்­க­ளுக்கு வேலைப்­பளு அதி­க­ரித்­தி­ருப்­ப­தாக தமிழ்­நாடு மக­ளிர் ஆணை­யம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் பல்­வேறு வித­மான குடும்ப வன்­மு­றைக்கு பெண்­கள் ஆளாக்­கப்­ப­டு­வ­தா­க­வும் பல பெண்­கள் மன உளைச்­ச­லால் பாதிக்கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அந்த ஆணை­யத்­தின் தலைவி கண்­ணகி பாக்­கி­ய­நா­தன் கூறி­யுள்­ளார்.

தற்­போது நில­வும் இக்­கட்­டான சூழ்­நி­லை­யில் வீடு­களில் குடும்ப வன்­மு­றை­யால் பெண்­களும் குழந்­தை­களும் பாதிக்­கப்­ப­டு­வது வருத்­தம் அளிப்­ப­தாக குறிப்­பிட்­டுள்ள அவர், குடும்­பங்­களில் நிக­ழும் பெண்­கள் மீதான வன்­முறை கண்­டிப்­பாக தடுக்­கப்­பட வேண்­டும் என வலி­யு­றுத்தி உள்­ளார்.

“குடும்ப வன்­முறை என்­பது ஒரு குற்­ற­மா­கும். எனவே வீடு­களில் பெண்­கள் மீது நடத்­தப்­படும் வன்­மு­றையை மக­ளிர் ஆணை­யம் வன்­மை­யாக கண்­டிக்­கிறது.

“அப்­படி ஏதா­வது வன்­முறை நடந்­தால் உட­ன­டி­யாக அரு­கில் உள்ள காவல் நிலை­யத்தை தொடர்பு கொள்ள வேண்­டும்.

“குடும்ப வன்­மு­றையை தடுப்­ப­தில் ஊட­கங்­களும் தங்­கள் பங்­க­ளிப்பை அளிக்க வேண்­டும்,” என கண்­ணகி பாக்­கி­ய­நா­தன் தெரி­வித்­துள்­ளார்.

பெண்­கள் மீது வன்­மு­றையை தடுப்­ப­தற்­கான விழிப்­பு­ணர்வு நிகழ்­வு­க­ளை­யும் மன­ந­லம், ஆற்­றுப்­ப­டுத்­து­தல் தொடர்­பான நிகழ்­வு­க­ளை­யும் பெண்­க­ளுக்­கான சிறப்பு விழிப்­பு­ணர்வு மற்­றும் பெண்­கள் பங்­கேற்­கக்­கூ­டிய நிகழ்­வு­களை ஒருங்­கி­ணைக்­கும்­படி ஆணை­யத்­தின் சார்­பாக வேண்­டு­வ­தாக கண்­ணகி பாக்­கி­ய­நா­தன் மேலும் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!