நோய் எதிர்ப்பு சக்திக்காக ஆயுர்வேத மருத்துவத்தை நாடும் மக்கள்

நோய் எதிர்ப்பு சக்திக்காக ஆயுர்வேத மருத்துவத்தை நாடும் மக்கள்

1 mins read
195685a3-3620-463a-b452-8eb291d1fbf6
கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். -

சென்னை: கொரோனா கிருமித் தொற்றுக்கு எதிராக உலகம் போராடி வரும் நிலையில் மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில் இந்தியாவின் பழமையான தமிழ் மருத்துவ முறை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. துளசி, லவங்கப்பட்டை, கறுப்பு மிளகு, சுக்கு, உலர் திராட்சை ஆகிய ஆயுர்வேத மூலிகைப் பொருட்களை தொடர்ந்து உட்கொள்வதும், வழக்கமான யோகா பயிற்சியில் ஈடுபடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என இயற்கை மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அன்றாட உணவில் மஞ்சள், சீரகம், கொத்தமல்லி, பூண்டு ஆகியவற்றை சேர்க்கவேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.