ஊரடங்கு உத்தரவை மீறி மஞ்சு விரட்டு நடத்திய எட்டு பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறி மஞ்சு விரட்டு நடத்திய எட்டு பேர் கைது

1 mins read
8b6050a4-27b4-4997-a24b-c6feecb4afa2
-

சிவகங்கை: ஊரடங்கு உத்தரவை மீறி சிவகங்கையில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடந்துள்ளது. இதையடுத்து 8 பேர் கைதாகி உள்ளனர். மதகுப்பட்டியை அடுத்துள்ள கீழக்கோட்டையில் மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து போலிசார் அங்கு சென்றனர். போலிசார் வருவதைக் கண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போட்டி நடந்த இடத்தில் இருந்து தப்பி ஓடினர். அப்போது தலைமைக் காவலரை போட்டியில் பங்கேற்ற காளை முட்டியதில் அவரது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து போட்டிக்கு ஏற்பாடு செய்த 30 பேர் மீது வழக்குப் பதிவானது. மேலும் 8 பேரை போலிசார் உடனடியாகக் கைது செய்தனர்.