வியக்க வைக்கும் பொதுமக்களின் நேர்மை

வியக்க வைக்கும் பொதுமக்களின் நேர்மை

1 mins read
ce1957cc-b173-4fbf-b22b-806f6f508ea1
ரொட்டிக்கு பணம் செலுத்துகிறார் ஒருவர். இக்கடையில் கபசுர குடிநீரும் இலவசமாக வழங்கப்படுகிறது. படம்: ஊடகம் -

கோவை: ஊர­டங்கு உத்­த­ர­வால் பெரும்­பா­லான கடை­கள் மூடப்­பட்­டுள்­ளன. இந்­நி­லை­யில் கோவை­யில் ஆளில்­லா­ம­லேயே ஒரு ரொட்­டிக் கடை செயல்­ப­டு­கிறது.

அங்கு ரத்­தி­ன­புரி 7ஆவது வீதி­யில் ரொட்­டிக் கடை நடத்தி வரு­ப­வர்­கள் தின­மும் கடைக்கு முன்பு ஒரு மேசை­யில் ரொட்டி பாக்­கெட்­டு­களை வைத்து விடு­கின்­ற­னர். அதன் அரு­கி­லேயே பணம் போடு­வ­தற்கு என சிறு பெட்­டி­யும் வைக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­மக்­கள் தேவை­யான ரொட்­டியை எடுத்­துக் கொண்டு அதற்­கு­ரிய தொகையை பெட்­டி­யில் போட்­டுச் செல்­கின்­ற­னர். அதே சம­யம் ஏழை­கள் பணம் ஏதும் செலுத்­தா­மல் ரொட்­டியை எடுத்­துச் செல்­வதை யாரும் தடுப்­ப­தில்லை.