சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமியை மேலும் பரவவிடாமல் தடுக்கும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இப்போதைய நிலையில் இந்தக் கிருமியின் தாக்கம் தமிழகத்தில் 2வது கட்டத்தில் இருந்தாலும் அபாயகரமான 3வது கட்டத்திற்குச் செல்லும் வாய்ப்பும் உள்ளது.
இப்படி அபாய கட்டத்தை எட்ட விடாமல் தடுக்க அரசு தீவிர நட வடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு மக்கள் அனை வரும் ஒத்துழைப்பு வழங்க வேண் டும் என்று பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
கொரோனா தடுப்பு, கண் காணிப்புப் பணிகளுக்காக தமிழக அரசின் சாா்பில் அமைக்கப்பட்ட 12க்கும் மேற்பட்ட குழுக்களுடன் முதல்வா் நேற்று தலைமைச் செயல கத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர் களுக்கு அவர் அளித்த பேட்டியில், "தமிழகத்தில் இதுவரை கொரோனா பரிசோதனை 2,10,538 பேருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 92,814 பேர். ஆய்வகப் பரிசோதனை மேற்கொண்டவர்கள் 6,095 பேர்.
"கொரோனா சிகிச்சைக்கு 137 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. 4 லட்சம் பரிசோதனைக் கருவிகள் வாங்கப்பட உள்ளன. அவற்றில் 50,000 கருவிகள் உடனடி யாக வந்துவிடும். 3,370 செயற்கை சுவாசக் கருவிகள் கையிருப்பில் உள்ளன.
"கொரோனா தடுப்புப் பணிகளுக்கு பொதுமக்கள் ரூ.100 கூட தங்களால் இயன்ற அளவில் நிதி வழங்கலாம். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவர்கள் எழுத வேண்டியது அவசியமானது. தேர்வை ரத்து செய்வதற்கு வாய்ப்பு இல்லை," என்றார் பழனிசாமி.

