கொரோனா கிருமி தாக்கத்தில் இருந்து மீண்ட 74 வயது மூதாட்டியின் புகைப்படம் வெளியீடு

கொரோனா கிருமி தாக்கத்தில் இருந்து மீண்ட 74 வயது மூதாட்டியின் புகைப்படம் வெளியீடு

1 mins read
9353aea6-8f60-4652-831b-813054d5ece2
கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்த பொழிச்சலூரைச் சோ்ந்த 74 வயது மூதாட்டியுடன் (நடுவில்) அவ ருக்கு சிகிச்சை அளித்த சென்னை ராஜீவ் காந்தி மருத்துவ மனையின் மருத்துவர்கள். படம்: ஊடகம் -

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அர­சுப் பொது மருத்­து­வ­ம­னை­யில் கொரோனா கிரு­மித் தொற்­றுக்­காக சிகிச்சை பெற்று வந்த 74 வயது மூதாட்டி ஒரு­வர் நன்கு குணம் அடைந்து இல்­லம் திரும்­பி­யுள்­ள­தாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

பொழிச்­ச­லூ­ரைச் சோ்ந்த அந்த மூதாட்­டி­யின் புகைப்­ப­டத்­தை­ முதல்­மு­றை­யாக வெளி­யிட்­டுள்ள மருத்­து­வ­மனை நிர்­வா­கம், மூதாட்டியின் பெயரைக் குறிப்­பி­ட­வில்லை.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்­தத்­தால் பாதிக்­கப்­பட்டிருக்கும் மூதாட்டி உயிர்க்­கொல்லி நோயான கொரோ­னாவை வென்­றி­ருப்­ப­தும் அச்­சத்­தில் உறைந்­தி­ருக்­கும் மக்­க­ளி­டையே புதிய நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

இந்நிலையில், சென்னை ராஜீவ்­காந்தி மருத்­து­வ­மனை வெளி­யிட்­டுள்ள செய்­திக் குறிப்­பில், "பொழிச்­ச­லூ­ரைச் சேர்ந்த 74 வயது மூதாட்டி கடந்த மாதம் 26ஆம் தேதி மூச்­சுத்­தி­ணறல் பிரச்­சினை கார­ண­மாக மருத்­துவமனை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். அதன்­பின்­னர் அவ­ருக்கு கிரு­மித் தொற்று இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டது.

"அவ­ருக்கு ஏற்­கெ­னவே நீரி­ழிவு நோய், ரத்த அழுத்த நோய் பாதிப்­பும் இருந்து வந்துள்ளது. இதை­ய­டுத்து, மருத்­து­வக் குழு­வினரின் தீவிர சிகிச்சையால் அவர் பூரண குண­ம­டைந்து நேற்று தனது இல்­லத்­திற்கு திரும்பினார்," என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்ட வர்­களில் முன்­ன­தாக 19 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பியுள்ள நிலை­யில், நேற்று மேலும் இரு­வர் வீடு திரும்­பி­யுள்­ள­தாக சுகா­தா­ரத் துறைச் செய­லர் பீலா ராஜேஷ் தெரி­வித்­தார்.